சென்னை ராயப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ மகளிர் பள்ளியில் மதமாற்றம் நடந்ததாகவும், மாணவிகளை பிரயோகம் செய்வதாகவும் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த புகார்களை விசாரணை செய்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு நடத்தி 85 பக்கங்கள் கொண்ட அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களிடம் வழங்கியது. இதை அடுத்த தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உறுப்பினர்களுடன் சென்று நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு நேற்று கடிதம் அனுப்பி இருக்கின்றது. அந்த கடிதத்தில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள பதிவு செய்யப்படாத குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் சட்டவிரதமாக மதம் மாற்றும் செயலில் ஈடுபடுவதாகவும், மேலும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்வதாகவும் புகார்கள் அனுப்பப்பட்டது. 24 மணி நேரத்திற்குள் அந்த விடுதியில் இருந்து சசிறுமிகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவின் முன் ஆச்சப்படுத்துமாறு அது தொடர்பான விசாரணை நடத்தி அதற்கு அறிக்கை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை உங்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
CBCR சட்டம் 2005 படி, 13, 14ஆம் பிரிவுகளின் கீழ் செயல்பாடு மற்றும் அதிகாரங்களை பின்பற்றும் ஆணையம் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடவடிக்கை விவரங்களுடன் வருகின்ற 20ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் ஆன்லைன் வழியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இப்பொழுது அதுக்கு சமர்ப்பிக்கப்படுவதில் தாமதம் ஏன்? ஆணையம் அனுப்பிய புகாரின் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து இவை ஆகியவற்றிற்கு கருத்து தெரிவிக்க வேண்டும்? என்றும் கூறப்பட்டுள்ளது.
source : kathir news
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















