கொரோனாவைரஸ் பற்றிய செய்திகளில் ஒரே ‘ஒரு நல்ல செய்தி’ – இந்தியாவில் மருத்துவ காப்பீடு (medical insurance policy) செய்திருப்பவர்கள் எந்த மாதிரியான காப்பீடு வைத்திருந்தாலும், காப்பீடு நிறுவனங்கள் கொரோனாவைரஸ் (COVID 19) சிகிச்சையையும் அந்த காப்பீட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது என காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority) உத்தரவிட்டுள்ளது. (எனவே, எந்த காப்பீட்டு நிறுவனமும், “கொரோனாவைரஸ் சிகிச்சை இந்த காப்பீட்டில் கிடையாது” என்று மறுக்க முடியாது)!
இந்த ஒரு ‘நல்ல’ செய்தியை தவிர மற்ற எல்லா செய்தியும் நம்மை பயப்படும் செய்திகளாகவே இருக்கின்றன.
உலக சுகாதார மையம் இந்த கொரோனாவைரஸ் வியாதியை ‘தொற்று’ (pandemic) வியாதி என்று அறிவித்துள்ளது.
இந்த வியாதியால் இது வரை நாலாயிரம் பேர் மரணம்.
இந்திய அரசும், கொரோனாவைரஸ் தாக்குதலை தேசிய பேரிடராக அறிவித்து, அதன் படி அடுத்த ஒரு மாதத்திற்கு (ஏப்ரல் 15 வரை) வெளிநாட்டிலிருந்து எவரும் இந்தியா வராத வகையில் அத்தனை விசாக்களையும் (குறிப்பிட்ட சிலவற்றை தவிர – எடுத்துக் காட்டு டிப்ளமாட்டிக் விசா) ரத்து செய்துள்ளது. (self-quarantine).
011-2397-8046 என்ற எண் கொரோனாவைரஸ் பற்றிய தகவலறிய உதவி எண்ணாக அறிவித்துள்ளது அரசு.
உலக அளவில் கொரோனாவைரஸ்…
- ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அமெரிக்கா வர தடை விதித்துள்ளார் டிரம்ப் .
- இத்தாலியில் உணவகங்கள் மருந்தகங்கள் தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூட உத்தரவு. நாடெங்கும் பிரயாணத்துக்கு தடை. தெருக்கள், ஷாப்பிங் மால்கள் வெறிச்சோடியுள்ளன.
- பெல்ஜியம், ஃபிரான்சு, ஜெர்மனி என அத்தனை நாடுகளும் சிக்கலில். ஜெர்மனியில் 7 கோடிப் பேருக்கு இந்த வைரஸ் தாக்கலாம் என்று மெர்க்கல் சொல்லியிருப்பது அங்கே பீதியை கிளப்பியுள்ளது (இந்த வியாதி தாக்கி இறப்பவர்கள் சதவீதம் 1 முதல் 4 வரை. ஜெர்மனியில் இந்த வியாதியால் 1% இறந்தாலும் 70 ஆயிரம் பேர்!!)
மேலும் விவரங்கள் கமெண்டில்.
Those having medical insurance policy in India, covering hospitalization, may note that IRDA has instructed the insurance companies to include the medical cover for COVID 19 irrespective of the type of policy.