கரோனா தொற்றுக்கு எதிரான போரை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு மிகச் சரியாகக் கையாண்டு வெற்றி பெறும் என்று இந்திய மக்கள் 93.5% பேர் நம்புவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐஏஎன்எஸ்-சி நடத்திய ஆய்வில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, கரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய மக்களில் 76.8% பேர் மட்டுமே மத்திய அரசை நம்பியதாவும், ஆனால், இதே நம்பிக்கை ஏப்ரல் 21ம் தேதி வாக்கில் 93.5 % ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், இந்திய அரசு, கரோனா தொற்றுக்கு எதிரான சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே தான் கருதுவதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 16 முதல் 21ம் தேதி வரை தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 16ம் தேதி 75.8% பேர் மட்டுமே மத்திய அரசை நம்புவதாகக் கூறியிருந்த நிலையில், இது ஏப்ரல் 21ம் தேதி 93.5% ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.