இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்குதலால் முதல் பலி: 76 வயது முதியவர்.

இந்தியாவில் கொரோனாவைரஸ் தாக்குதலால் முதல் பலி: 76 வயது முதியவர்.

காரணம் கொரோனாவைரஸ் தாக்குதல் மட்டுமல்ல. 29 ஜனவரி முதல் 29 பிப்ரவரி வரை சவுதியில் இருந்திருக்கிறார் அவர். 6 மார்ச் அன்று காய்ச்சல், இருமல். வீட்டில் சிகிச்சை பலனில்லாமல் 9 மார்ச்சில் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அவரை தனிமைப்படுத்தி கண்காணிக்க கோரியதை உடன் வந்தவர்கள் அனுமதிக்கவில்லை. ஆய்வறிக்கைக்கு காத்திராமல் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளார்கள் (உறவினர்கள்). அந்த முதியவருக்கு ஆஸ்த்துமாவும் உண்டு.

அவரை ஹைதராபாத் கொண்டு சென்று ஒரு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 10ஆம் தேதி அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு வரும் வழியிலேயே உயிர் பிரிந்திருக்கிறது (ஹைதராபாத் மருத்துவமனை மீது நடவடிக்கை பற்றி தகவலில்லை).

முதியவருடன் இருந்தவர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது!

#CoronaVirusUpdate:‬

‪Death of a 76 year old male from #Karnataka is confirmed to be caused due to co-morbidity and he has also tested positive for #COVID19. ‬

‪The details are here:‬

Exit mobile version