இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை மனிதர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புனேவில் உள்ள ஜெனோவா நிறுவனம் எச்ஜிசிஓ19 என்ற எம்ஆர்என்ஏ தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த ஆர்என்ஏ தடுப்பூசி வழக்கமான தடுப்பூசி போல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கமால், உடலில் வைரஸ் புரதத்தை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை கொண்டவை. இதன் மூலம் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும். உயிரி தொழில்நுட்ப துறை ஆதவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை மனிதர்களிடம் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
பெருந்தொற்று பிரச்னைக்கு தீர்வு காண எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசிகள், அறிவியல் பூர்வமாக சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பானது. இவற்றை குறைந்த செலவில் விரைவாக உற்பத்தி செய்ய முடியும்.