புதுவையில் இருவருக்கு கொரோனா உறுதி ! டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் !

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவிலும் வைரலாக பரவி வருகிறது. கொரோனவை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளும் மத்திய மாநில அரசுகள் துரிதமாக செய்து வருகின்றது. தற்போது வரை இந்தியாவில் 1,397 பேர் பாதிக்கப்பட்டு 35 பேர் பலியாகியுள்ளனர். இந்தியவில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 234, நபர்களும் மஹாராஷ்டிராவில் 216 நபர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரை நேற்று மார்ச் 31 ஆம் தேதி ஒரே நாளில் 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது , இதன் காரணமாக தமிழக்தில் பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் கொரோனா வைரசால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஏப்ரல் 01 தேதி மேலும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டில்லி நிஜாமுதீன் மசூதி மாநாட்டில் பங்கேற்று புதுவையை சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இவர்கள் இருவரும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த . ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version