இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுடன் தொடர்புள்ளவர்களே. குறிப்பாக தமிழகத்தில் 85 சதவீதம் பேர் அந்த மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அல்லது அவர்கள் குடும்ப தொடர்புடையவர்கள்.
தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் அந்த வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது வெளிநாடுகளில் இருந்து அந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள (சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசா மூலம்) வந்த நபர்கள் தான். அவ்வாறு சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்து திட்டமிட்டு இந்த கொடிய நோயைப் பரப்பியவர்களுக்கு, அவர்கள் சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காக சிறையில் கூட அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவது வெட்கத்திற்கும், வேதனைக்குரிய செயலாகும்.
ஈரோடு மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து (தாய்லாந்து) சட்ட விரோதமாக வந்து தங்கியிருந்த இஸ்லாமியர்களை சில நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் (தாய்லாந்து நீதிமன்றமும் இவர்களை கொரானா தொற்று முடியும் வரை அங்கேயே சிறையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது) அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தீவிரவாதிகளுக்கு (சட்டவிரோதமாக சுற்றுலா விசா மூலம் வந்து மதப்பிரச்சாரம் செய்பவர்களும் நோய்த்தொற்று ஏற்படுத்துபவரும் தீவிரவாதிகள் தான்) சிறையில் ரம்ஜான் தொழுகை செய்வதற்கு ( கொண்டாடுவதற்கு) சிறப்பு ஏற்பாடு சிறப்பு உணவு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.
ஒரு நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களுக்கு சலுகைகள் வழங்குவது உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத மிகப்பெரும் அதிசயமாகும். தேசப் பாதுகாப்பிற்கு முறையாக செயல்படாத ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக இந்து முன்னணி கண்டிக்கிறது.
கடிதம் :- V.P. ஜெயக்குமார்
மாநில துணைத் தலைவர்
இந்து முன்னணி
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















