உலகை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்று சமுதாய தொற்றாக மாறவில்லை. கட்டுக்குள் தான் இருக்கிறது. பல மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் அதிகம் என சுகாதார துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள 3 மதராசாவை சார்ந்த 53 மாணவர்களுக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ABP செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது . இருப்பினும், நிர்வாகம் 40 பேர் மட்டுமே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறுகிறது, அவர்களில் சிலருக்கு கொரோன தோற்று இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கின்றன. கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால் அப்பகுதியினை ” danger zone” ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி,பாதிக்கப்பட்ட மதரசா மாணவர்களின் பெரும்பாலானோரின் வயது 10 முதல் 20 வயது வரை இருக்கும். மேலும் அறிக்கையில் , ஜமாத்தினார்கள் வருகையை வழக்கமாக கொண்டுள்ளனர். அமர் உஜலா அறிக்கையின்படி, கான்பூரில் உள்ள குலி பஜார் பகுதியில் 42 மாணவர்களுக்கு கொரோன நோய் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால் அப்பகுதி ஒரு ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது.
இதர இரண்டு மதரஸாக்களில் முறையே 8 மற்றும் 6 மாணவர்களுக்கு கொரோன நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் ப்ரஹ்மதேவ் ராம் திவாரியின் அறிக்கையின் படி இவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக அவர்களின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.