நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா நேற்று இன்று 6 ஆயிரத்தை கடந்தது.நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ,கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதில் ,அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும். கொரோனா மேலாண்மைக்கான அனைத்து தயார்நிலையில் வைத்திருக்கவும் , கொரோனா தொற்று குறித்து தேவையில்லாத அச்சத்தை பரப்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். என மாநில சுகாதார துறை அமைச்சர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.