கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வருடந்தோறும் பெண்கள் பொங்கலிட்டு பகவதி அம்மனை வழிபாடும் நிகழ்ச்சி நடைபெறுவைத்து வழக்கமாகும். இந்த விழாவில் இந்து பெண்கள் லட்சக்கணக்கானக்கில் பங்கேற்று அம்மனை வழிபடுவது வழக்கமாகும். லட்சக்கணக்கில் பெண்கள் மட்டுமே பங்கேரும் விழாஇதன் காரணமாக பகவதி அம்மன் பொங்கல் வழிபாடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக கூட்டம் சேரும் இடங்களான மசூதி மெக்கா, இயேசு பிறந்த தேவாலயம் ஆகியவை மூடப்பட்டுள்ளது., ஆனால் இந்துக்கள் ஆலயங்கள் ஏதும் மூடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பகவதி அம்மன் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. விழாவானது காலை 9.45 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவினை கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் பூசாரி தீமூட்டி விழாவை தொடங்கி வைத்தார். பண்டார அடுப்பில் தீ மூட்டியதை தொடர்ந்து பெண் பக்தர்கள் அவரவர் அடுப்புகளில் தீமூட்டி பொங்கல் விட தொடங்கினர். கோவில் அமைந்துள்ள கிழக்கே கோட்டை முதல் நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கில் பெண்கள் பொங்கலிட்டனர்.
பகல் 2.15 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி முடிந்து அம்மனுக்கு பொங்கல் படைக்கப்பட்டது, அதன் பின் அம்மனுக்கு நைவேத்தியம் காட்டப்பட்டது . இதனை தொடர்ந்து சிறு கலை நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் குத்தியோட்டம்நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10.30 மணி அளவில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது அதன்பிறகு பக்தர்கள் காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சிநடைபெற்று ,விழா நிறைவுபெற்றது.
கொரோனா வைரஸ் பீதியிலும் லட்சக்கணக்கான பெண்கள் ஒன்றாக கலந்து கொண்டு பொங்கல் வைத்தது உலகமே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தெய்வத்தின் நம்பிக்கையை இது மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. என்று பரவலாக உலகம் பேசுகிறது.