உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதை கட்டுப்படுத்தவும் தொற்று பரவாமல் இருக்கவும் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது கடைபிடிக்கபட்டு வருகிறதுஇந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் மாநிலம் கோரக்பூரில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. கோரக்பூரில் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளனர்.
அதேபோல், உ. பியின் மற்றொரு மாவட்டமான தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛லாக் டவுன்’ என பெயர்சூட்டியுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதியினருக்கு ஊரடங்கு அமலின் பொது பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், குழந்தையின் மாமா, அவளுக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில். “கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதால், குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று கொரோனா என பெயரிட்டேன்” என அவர் கூறினார்.
இதை தொடர்ந்து, ‘லாக் டவுன்’ குழந்தையின் தந்தை, பவன் கூறுகையில்.”கடந்த 29 ஆம் தேதி மாலை எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன், அப்போது அவர் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றார்.
இந்த சூழலில் நாம் அனைவரும் கொரோனா தொற்று நோய்க்கு ஆளாகி வருவதால் குழந்தைக்கு லாக் டவுன் என பெயரிட்டேன்.
என்னை பொறுத்தவரையில், கொடிய வைரஸிலிருந்து நம்மை காப்பாற்ற, முழு நாட்டிலும் ஊரடங்கு விதியை பிரதமர் மோடி அறிவித்தது மிக சரியான நடவடிக்கை. கொரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தங்களையும் தேசத்தையும் காப்பாற்றவும், என் மகன் அனைவருக்கும் நினைவூட்டுவான்” என அவர் கூறினார்.