உலகை உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. முதன் முதலில் சீனாவில் அரபிதா இந்த சீன வைரஸ் தற்ப்போது உலக அளவில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதுமட்டுமில்லாமல் சுமார் 1.72 லட்சம் மக்கள் இந்த கொடூர நோயால் இறந்துள்ளார்கள். இந்த நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 19 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 600 நபர்கள் உயிர் இழந்துள்ளார்கள். நாளுக்கு நாள் இதன் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை தடுக்கும் விதமாக உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றது.
சென்ற வாரம் உலகின் முதன்மையான பல்கலைக்கழகம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது மிக தீவிரமாக அதிவேக தடுப்பூசி தயாரிப்பதாக உறுதியளித்தனர், மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினார்கள்.இந்த தடுப்பு மருந்து முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சாரா கில்பெர்ட்டின் கூற்றுப்படி, அவர்களின் ‘ChAdOx1’ தடுப்பூசி SARS-CoV-2 எனப்படும் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படும்.
பிரிட்டனின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், 10 டவுனிங் தெருவில் தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது, ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழுவுக்கு அவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளிக்க அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் வழங்கும் என்றும், லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு மேலும் 22.5 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.