இந்திய அளவில் கடந்த சிலநாட்களாக கொரோனா நெருக்கடியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது தமிழகம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்த நெருக்கடியினை திசைதிருப்ப தூத்துகுடியில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை என விஷயத்தை திசை திருப்புகின்றார்.
அரசு அலுவகமெல்லாம் மூடி கிடக்கும் இந்நேரம் அவசரமாக வேலை கொடுக்கும் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை.
கொரோனாவில் செத்துமடியும் உடல்களையும், மேற்கொண்டு ஊரடங்கு நீட்டிக்கபடும் அவசியம் இருக்கும் நிலையில் ஏதேதோ செய்து மக்கள் கவனத்தை திசை திருப்புகின்றது அரசு.
இந்த கொரோனா காலத்தில் சத்துணவு இல்லை , அங்கன்வாடி இல்லை.
அந்த பொருட்களை கொண்டு நோயாளிகளுக்கு இலவச உணவு கொடுக்காமல் அறநிலையதுறையில் இருந்துதான் கொடுப்போம் என்பதில் இருகின்றது இந்த அரசின் ஏதோ ஒரு தந்திர திட்டம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















