உலகில் எல்லோரும் முககவசம் அணியும்பொழுது ஒரே ஒரு நபர் மட்டும் அணியமாட்டேன் என அடம்பிடிக்கின்றார், அவர் சாதாரண சாமான்யன் என்றால் விட்டுவிடலாம் ஒரு நாட்டின் அதிபர் என்றால் எப்படி?
அவர் பெயர் டிரம்ப், அந்த துரதிருஷ்ட நாடு அமெரிக்கா
ஆங்காங்கே கூட்டம், அறிக்கை, சுற்றுபயணம் என செல்லும் டிரம்ப் முககவசம் அணிவதில்லை. இந்த நிருபர் கூட்டம் விஜயகாந்திடம் வம்பிழுப்பது போல திட்டமிட்டு டிரம்பை வம்பிழுப்பதில் எப்பொழுதுமே தனி கவனம் செலுத்தும்
டிரம்பும் அதில் சிக்குவார்
அப்படி ஒரு நிருபர் “ஏன் நீர் முககவசம் அணியவில்லை” என கேட்டு தொலைக்க “நான் முககவசம் அணிந்தால் நீ எப்படி படமெடுப்பாய்? என் முகம் முழுக்க தெரியுமா? நான் என்ன தலைமறைவு தீவிரவாதியா?” என கத்திவிட்டார்
கவர் வாங்கிகொண்டு போக அவர்கள் என்ன தமிழ்நாட்டு ஊடககாரர்களா?
அவர் திருப்பி கேட்டார், “அய்யா உமக்கு நோய் தாக்காதா?” , டிரம்ப் திரும்ப சொன்னார் “நான் பாதுகாப்பாக இருக்கின்றேன் நோய் தாக்காது”
இன்னொரு நிருபர் கேட்டார், “உமக்கு தாக்காது சரி, ஆனால் உம்மிடம் கொரோனா கிருமி இருந்து அது மற்றவருக்கு பரவினால், சிலர் உடலில் கொரொனா இருந்தாலும் தாக்காது ஆனால் பரவும், அப்படி நீங்கள் பரப்பினால்?, நோய் பரப்பும் பிரசிடென்ட்டா நீங்கள்” என கேட்டுவிட டிரம்ப் ஓடிவிட்டார்
இப்பொழுது நோய் பரப்பும் ஜனாதிபதி என கலாய்க்கபடுகின்றார் டிரம்ப், போகிற போக்கில் மனிதர் இன்னும் பல கலாய்ப்புகளுக்கு ஆளாகலாம்
சரி மனிதர் ஒரு முககவசம் அணிந்தால்தான் என்ன? இந்த ஈகோ இருக்கின்றதே அது கொரொனாவினை விட கொடியது
அதனால் கொரொனா இல்லாவிட்டாலும் இப்படி கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றார் டிரம்ப்.
கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.