சீனாவை பூர்விகமாக கொண்ட கொரோனா தொற்று நோய் தற்போது உலகை ஆட்சி செய்து வருகின்றது, இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என உலகின் 190க்கும் நாடுகளில் தனது இருப்பிடத்தை பரப்பி உள்ளது. சீனாவின் தயாரிப்பான கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கிட்ட தட்ட 12 லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 64 ஆயிரம் நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். இதற்கு மருந்து கன்டுபிடிப்பதற்கு உலகின் பல விஞ்ஞானிகள் குழு தனித்தும் சமூகமாகவும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
நிலைமைஇவ்வாறு இருக்க கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க காலம் இறங்கியுள்ள உலக பணக்காரர்களில் முன்னணி யாக இருக்கும் பில்கேட்ஸ் கூறி இருப்பதாவது !
கொரோனா வைரஸ்க்கான தடுப்பூசிதயாரிக்கும் அனைத்து முயற்சிகளும் மிகவும் வேகமடைந்துள்ளது .
மக்களுக்கு மிகவும் பலனளிக்கக்கூடிய 7 மருந்துகளை தேர்வு செய்யப்பட்டுள்ளது, தடுப்பூசிக்காக கோடிகணக்கான பணம் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த 7 மருந்துகளும் தயாரிப்பதற்கான முழு முயற்சிகளும் தற்போது வேகமெடுத்துள்ளது. அதில் ஒன்று அல்லது இரண்டு கண்டிப்பாக உலக மக்களுக்கு பலனளிக்கும்.

இதுபோன்ற விவகாரங்களுக்கு அரசாங்கத்திற்கு பணம் திரட்ட முடியும், இறுதி வடிவம் பெறப்போகும் கொரோனவுக்கான 7 தடுப்பூசிகளில் 2 மட்டுமே பலனளிக்கும் என்றாலும், தாங்கள் அந்த ஏழுக்கும் நிதி அளிக்க உள்ளோம். இதனால் பல கோடிகள் வீணாகலாம், இருப்பினும் இறுதி வடிவம் பெறும் தடுப்பூசி ஒன்றை கண்டறிவதற்கு அது பயன்படும்.
கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















