இன்று உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவால் தயாரிக்கப்பட்டது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார் நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர்
உலகின் ஆணிவேரை அசைத்து பார்த்துவருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இது முதலில் தோன்றியது சீனாவின் உஹான் நகரம் ஆகும் . இது அங்கிருக்கும் இறைச்சி மூலம் பரவியது என கூறினார்கள். சீனாவின் வைராலஜி ஆய்வகமும் அங்குதான் உள்ளது. இது தொடர்பாக அமேரிக்கா மற்றும் பல அறிஞர்கள் இது சீனாவால் தொடுக்கப்பட்ட உயிரியல் போர் என கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு எயிட்ஸ் நோயை கண்டுபிடித்த நுண்கிருமி அறிஞர் லூக் மோன்தக்னேர் கொரோனா வைரஸ் பற்றி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்: சீனாவின் வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக்கூடத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல், ‘எய்ட்ஸ்’ நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.அதற்கான ஆய்வின் போது, கொரோனா நுண்கிருமியை, மனிதர்கள் செயற்கையாகப் படைத்துள்ளனர். அந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் போது, கொரோனா நோய் தொற்று வெளியில் பரவியிருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதே குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அதை சீனா மறுத்து வந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வாளரும் தெரவித்திருப்பதால், இதுகுறித்த விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















