தற்போது ஆளுகை ஆட்சி செய்து வருது கொரோனா எனும் கொடுங்கோலன். கோரோனோ கொடுங்கோலனால் இதுவரை 24000 மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோன உருவாகிய இடம் சீனா அங்கு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
சீனா கொரோன கண்டுபிடிக்கும் கருவி உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் உலகில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக தெரியவில்லை. இதனால் கொரோன கண்டுபிடிக்கும் கருவியினை உலக நாடுகள் போட்டி போட்டு வாங்கி வருகின்றார்கள்.
சீனா இத்தாலியை தொடர்ந்து கொரோனவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு ஸ்பெயின் இங்கு 57,786 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,4,365 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்பெயின் அரசு அவசரமாக சீனாவிடமிருந்து 640000 கொரோனா வைரஸ் கண்டறியும் கருவியை வாங்கியது. இதனை தொடர்ந்து வாங்கிய கருவிகள் சுத்தமாக வேலை செய்யவில்லை என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஸ்பெயின் அரசு தனது வேதனை தெரிவித்துள்ளது.மட்டுமில்லாமல் தனது எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளது.
சீனாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் திரும்பும் நிலை உருவாகி உள்ளது. சீனாவிடம் எந்த பொருள்களையும் கூடாது என்ற தடை விரைவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது