சீனாவின் உஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் ஆட்டி படைத்தது வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் பரவி பேரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக வல்லரசனா அமெரிக்கா தான் கொரோனாவால் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தையும் உயிரிழப்பு 2500-யும் கடந்துவிட்டது. உலகம் முழுவதும் கொரோனாவை தாக்கத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்தியிருப்பதால், உலகளவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனாவைரஸ் எப்படி உருவானது என அறிஞர்கள் சோதனையில் இறங்கியுள்ளார்கள். அதில் முரணான தகவல்கள் வெளிவருகிறது. சீனாவும் தெளிவாக இது குறித்து அறிக்கை விடவில்லை இந்த நிலையில் நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி லூக் மாண்டேக்னெர், கொரோனா வைரஸ் உஹானின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் தான் என்றும் அங்கிருந்துதான் இது பரவியது என கூறினார். அமெரிக்காவையும் இதே குற்றசாட்டை ஆரம்பித்திலிருந்தது கூறி வருகிறது. சீனாவின் மீது பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது
இந்தியா தரப்பில் , கொரோனா விவகாரத்தில் சீனாவின் மீது நேரடியான குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை கூறப்படவில்லை இந்த நிலையில், மத்திய கப்பல்துறை அமைச்சர் அமைச்சர் நிதின் கட்கரி, கொரோனா வைரஸ் ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர் நிதின் கட்கரி, கொரோனாவுடன் வாழும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். இது இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. செயற்கையாக ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸ். உலக நாடுகள் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே விரைவில் கொரோனாவிற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் என நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















