உலகை அச்சுறுத்தி வரும் கொரோன வைரசுக்கு பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசி கோவாக்சின் தடுப்பூசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
பொதுமக்களின் நலன் கருதி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு, புதிய வகை தொற்றை கருத்தில் கொண்டு, அவசரகால உபயோகத்திற்காக சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள தடுப்பு மருந்தை, நிபுணர் குழு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம், சீரம் நிறுவனமும் விண்ணப்பித்தது. இதையடுத்து நேற்று அந்த அமைப்பு பரிந்துரைத்தது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி மருந்தை கண்டறிந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்தினை நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திட டி.சி.ஜி.இ. பரிந்துரைத்துள்ளது.