இன்று காலை, “அடுத்த 2 – 3 மாதங்களுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு வரும் என்று அதார் பூனாவாலா ஃபைனான்ஷியல் டைம்ஸுக்கு நேர்காணல் தந்திருக்கிறார்.” என்ற செய்தி (படம் 1) – Propoganda / Hit Job – காங்கிரஸ் கைத்தடி எகனாமிக் டைம்ஸில் செய்தி வெளியாக… அது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது .
மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு, “அந்த செய்தி பொய்” என்று கூறி, விளக்கம் தந்தது. (படம் 2). கீழே விளக்கம்:
1, மே ஜூன் ஜூலையில் 11 கோடி தடுப்பு மருந்துகளை தர சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு (கோவிஷீல்டு) 28 ஏப்ரலில் ரூ 1732 கோடி முன்பணம் தந்துள்ளோம். அந்த தொகையை அதே நாளில் (ஏப்ரல் 28) சீரம் இன்ஸ்டிட்யூட் பெற்றுக் கொண்டது.
2, தற்போது வரை, கடந்த முறை கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ் ஆர்டரில், 3.5.2021 வரை 8.744 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
3, மே ஜூன் ஜூலையில் ஐந்து கோடி தடுப்பு மருந்துகளை தர பாரத் பயோடெக்கிற்கும் (கோவாக்ஸின்) ஏப்ரல் 28இல் ரூ 787 கோடி வழங்கப்பட்டது. அவர்களும் அதை பெற்றுக் கொண்டார்கள்.
4, தற்போது வரை, கடந்த முறை கொடுக்கப்பட்ட 2 கோடி டோஸ் கோவாக்சின் ஆர்டரில், மே 3ம் தேதி வரை 0.8813 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
5, எனவே, தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு புதிதாக ஆர்டர் கொடுக்கவில்லை என கூறுவது தவறானது.
6, 2021 மே 2ம் தேி நிலவரப்படி, மத்திய அரசு 16.54 கோடி தடுப்பூசி டோஸ்களை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. 78 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் அவைகளிடம் இன்னும் கையிருப்பில் உள்ளன. கூடுதலாக 56 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு அடுத்த 3 நாட்களில் அனுப்பப்படவுள்ளன.
இந்திய அரசு அறிக்கையை அடுத்து சீரம் இன்ஸ்டிட்யூட்டும் மத்திய அரசு அறிக்கையை உறுதி செய்து செய்தி வெளியிட்டது (படம் 3).
படம் 4இல் அதார் பூனாவாலாவின் செய்தி: “மத்திய அரசு சொல்வது உண்மை. அந்த பேட்டியில் வந்த செய்தி பொய். மத்திய அரசு இது வரை 26 கோடி மருந்துக்கு ஆர்டர் கொடுத்தது. அதில் இதுவரை 15 கோடி அரசுக்கு தந்துள்ளோம். வரும் நாட்களில் 11 கோடி தருவோம்”
கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக், சைடஸ் உள்ளிட்ட 6 தடுப்பு மருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கோடி மருந்துகள் இந்தியர்கள் உபயோகத்துக்காக கிடைக்கும் என்கிறது ஒரு செய்தி. எனவே தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை.
சரி….. இந்த குழப்பங்களுக்கு காரணம் யார்? ஊடகமா என்றால்… ஊடகமும் காரணம். உளறிக்கொட்டும் அதார் பூனாவாலாவும் காரணம்.
ஃபைனான்ஷியல் டைம்ஸுக்கு அவர் அம்மாதிரி பேட்டி தந்திருக்க தேவையில்லை. இரு தினங்களுக்கு முன், லண்டனின் டைம்ஸ் பத்திரிக்கையில், “எனக்கு மிரட்டல் வருவதால் இந்தியாவை விட்டு ஓடி வந்து லண்டனில் தஞ்சம் புகுந்திருக்கிறேன்” என்று பேட்டி கொடுத்து அதை பின்னர் மறுத்தார்.
டியர் அதார் பூனாவாலா… நிலைமை சீராகும் வரை, வாயை கொஞ்சம் திறக்காமலிருக்கவும்! பொறுப்புடன் நடந்து கொள்ளவும். பாரத் பயோடெக் உம்மைப் போல எந்த குழப்பங்களும் ஏற்படுத்துவதில்லை என்பது நினைவிருக்கட்டும்.
India could face vaccine crunch for 2-3 months says Serum CEO Adar Poonawalla
https://economictimes.indiatimes.com/news/india/india-may-face-vax-crunch-for-2-3-months-poonawalla/articleshow/82362388.cms
Media reports alleging that Centre has not placed any fresh order for COVID19 Vaccines are Incorrect and not Based on Facts
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715649
கொவிட்19 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் தரவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி பொய்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715683
We endorse this statement, & the authenticity of the information. We have been working closely with the Government of India for the past year & thank it for its support. We remain committed to ramping up our vaccine production to save every life we can. https://bit.ly/3nHIzoh
https://twitter.com/SerumInstIndia/status/1389149209501212672
Amongst multiple reports it is important that correct information be shared with the public.
https://twitter.com/adarpoonawalla/status/1389166756871041024