கோவை தெற்குத் தொகுதியில் பாஜக தாமரை சின்னத்தில் வானதி சீனிவாசனுக்கு எதிராக களம் கண்ட கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் இந்த பெருந்தொற்று சமயத்தில் காணவில்லை.போன தேர்தலில் மற்ற இடங்களை விட அதிக ஓட்டு மக்கள் மய்யத்திற்கு கிடைத்த இடம் கோவை தெற்குத் தொகுதி என்றே நடிகர் கமல் இங்கே வேட்பாளராக நின்றாரே தவிர தொகுதி மக்களுடனே இருந்து கூப்பிட்ட குரலுக்கு சேவகம் செய்ய எண்ணி வேட்பாளராக நிற்கவில்லை .
வெற்றி வாய்ப்பு வந்தால் மட்டுமே இந்த பிக்பாஸ் இங்கே வருவார் .அதுவும் எப்படி ??? அவ்வப்போது இல்லையெனில் உலகம் சுற்ற போய் விடுவார் இந்த பிறவி நடிகர் கமல்ஹாசன் .நடிப்பில் கைதேர்ந்தவர் தான்.ஆனால் கோவையிலேயே பிறந்த வளர்ந்தவர் வானதி சீனிவாசன் வென்றாலும் தோற்றாலும் தன் தொகுதியை அவர் அம்போவென விட்டு விடமாட்டார் .
காலமறிந்து உதவி செய்தல் என்பது தான் பெரிய உதவி .இந்தக் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக மக்கள் உயிர் பயம் காரணமாக செய்வதறியாது வயதானவர்களுக்கு மருத்துவ வசதிகளை தர இயலாது வசதியற்றவர்களும் ,பிற மக்களும் திணறி நிற்கையில் இதோ நானிருக்கிறேன் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட ! என களம் இறங்கினார் வானதி அவர்கள்
கொடிய அரக்கன் கொரோனாவை ஒழிக்க தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு காலத்தே செய்ய
கொரோனா தடுப்பூசி இலவச மருத்துவ உதவி மையத்தை அமைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்து இலவச வாகன வசதி ஏற்பாடு செய்தல் ,உங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் , மருந்துகள் உங்கள் வீடு தேடி கொண்டு வந்து தரும் வசதிகள் ,கொரோனா பாதித்த குழந்தைகள் , முதியவர்களை கவனித்து கொள்ள உதவிகள் செய்து தருதல் என்று மகத்தான காலத்தே ஆன மக்கள் சேவையை தொடங்கியுள்ளார் வானதி சீனிவாசன் அவர்கள்.
வெற்றி பெற்றால் மட்டுமே களத்திற்கு வந்து களமாடுவேன் என்றிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே ,
இந்த பெருந்தொற்று சமயத்தில் மக்களை முடிந்த வரை குழப்பி திணறடித்து அதிலும் தனக்கான அரசியல் ஆதாயங்களை உருவாக்கி விட்டு, கொடைக்கானலுக்கு குடும்பத்தோடு உல்லாச சுற்றுலாவிற்கு சென்ற கள்ளத்தனமான அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே , அரிதாரம் பூசி சினிமா வசனங்கள் பேசிய நாடக நடிக அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே கொடிய பெருந்தொற்று என்ன அந்த எமனே வந்தாலும் சரி
அஞ்சாது மக்கள் பணி ஆற்றுவேன் என்று களமிறங்கி சேவை செய்ய வந்த பாஜக மகளீர் தேசிய தலைவியான வானதி சீனிவாசன் என்ற இந்த கோவை தாமரை மலருக்கு மக்களின் சார்பில் இதயங்கனிந்த நன்றிகளம்மா .