கம்யூனிஸ்ட்னாலே ‘ஒரு வெளம்பரம்’ தானே…

மக்களிடத்தில் உண்மையை குறைத்து பொய்களை அதிகம் சொல்லும் இயக்கமாக நாலுக்கு நாள் கம்யூனிஸ்டுகள் முன்னேறி வருகிறார்கள்.

கேரள முதல்வர் அறிவிக்காத ₹.20 ஆயிரம் கோடி நிதி அறிவித்தாக தமிழக கம்யூனிஸ்ட்கள் பொய்களாக அளந்துவிட்டனர்.

இதேபோல் கேரளாவுக்கு பினராயி, தமிழகத்துக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தான் என நிருபித்து வருகிறார்.

1) தீக்கதிர் மற்றும் சன் நியூஸ் ‘செய்தி’: “ ரூ. 250 விலையில் 8.5 கிலோ அளவில் வீடு தேடி வரும் 20 வகையான காய்கறி தொகுப்பு – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அறிவிப்பு.”

2) 29.3.2020 அன்று மதுரை மாநகராட்சி அறிவிப்பு: “மதுரை மாநகராட்சி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 100 வார்டு பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட உள்ளன.”

மாநகராட்சி செயல்படுத்தும் திட்டத்தை தன்னுடைய திட்டமாக உரிமை கொண்டாடுவது…. ஆஹா, என்னவொரு புத்திசாலித்தனம்!!!

காய்கறியும் எங்களுடையது அல்ல, வண்டியும் எங்க வண்டி அல்ல, அட, காய்கறி போடும் பிளாஸ்டிக் பை கூட எங்க செலவு இல்லை, செய்தி மட்டும் தான் எங்களுடையது.

என்று தான் திருந்துவார்களோ.

Exit mobile version