இந்தியாவில் போதை மருந்து கடத்தலும் பயன்பாடும்அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த மில்லேனியம் பிறந்த பிறகு, 2001 முதலாக போதையின் நுகர்வு கொஞ்சம் கொஞ்சமாகஅதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.இந்தியாவில் மூன்று மாநிலங்கள் போதைக்கு அடிமையாகி உள்ளன. 1) பஞ்சாப் 2) மகாராஷ்டிரா 3) கேரளம். இவை தவிர சினிமா உலகக் கூத்தாடிகளும் அவர்களின் பிள்ளைகளும், குறிப்பாக பாலிவுட், கோலிவுட் ஆகிய பகுதிகளில் போதை நுகர்வு அதிகமாக உள்ளது.
டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் (2004-2014) போதை மருந்து கடத்தல் மிகவும் எளிதாக நடைபெற்றது.எப்போதாவது போலீசார் பிடிப்பார்கள், கேஸ் போடுவார்கள், ஜாமீனில் விட்டு விடுவார்கள். அவ்வளவுதான். ஜாமீனில் வெளிவந்த கயவர்கள் தொடர்ந்து போதை மருந்து கடத்தலில் சர்வ சுதந்திரமாக ஈடுபடுவார்கள்.இதுதான் டாக்டர் மன்மோகன் சிங் காலத்தின் order of the day.2014ல் மன்மோகன்சிங் வீட்டுக்குப் போனார்.நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இருந்தும் போதையை எதிர்த்து அவர் போர்க்கோலம் எதுவும் பூணவில்லை. போதை தடுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு எதையும் மோடி பிறப்பிக்கவில்லை.
சுருங்கக் கூறின், மோடியின் 1.0 ஆட்சியானது (2014-2019) போதை மருந்துகளைப் பொறுத்துஇன்னொரு மன்மோகன் ஆட்சியாகவே இருந்தது.எனவே மன்மோகன்ஜி ஜிந்தாபாத் என்று கோஷம் போட்டவர்கள், இப்போது மோடிஜி ஜிந்தாபாத் என்று கோஷம் போட்டுக்கொண்டே போதை மருந்துகளை கிலோ கணக்கில் கடத்திக் கொண்டே இருந்தனர்.2019 மே முதலாக மோடியின் 2.0 ஆட்சி நடைபெற்று வருகிறது. தமது 1.0வின்போது செய்யாமல் விட்ட பல காரியங்களைச் செய்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்த மோடியும் அமித் ஷாவும் proactiveஆகச் செயல்படத் தொடங்கினர்.
மன்மோகனின் ஆட்சியும் சரி, மோடியின் ஆட்சியும் சரி,இரண்டுமே பூர்ஷ்வா ஆட்சிதான். இவ்விரு பூர்ஷ்வா ஆட்சிகளிலும், மிகவும் மோசமான ஆட்சியாக இருந்தது மன்மோகன்சிங்கின் ஆட்சியே என்று இந்திய ஆளும் வர்க்கம் கருதியது. பூர்ஷ்வா ஒழுங்கு (bourgeois order) முற்றிலுமாகக் குலைந்து போய் entropyயானது அதன் உச்சத்தில் இருந்தது மன்மோகனின் காலத்தில்தான் என்று இந்திய ஆளும் வர்க்கம் கணித்திருந்தது.எனவே மோடி பிரதமரானவுடனேயே, பூர்ஷ்வா ஒழுங்கை நிலைநாட்டுமாறு இந்திய ஆளும் வர்க்கம் மோடிக்குக் கட்டளை இட்டது. அதன்படியே முன்னுரிமை வாய்ந்த விஷயங்களில் தனது 1.0 ஆட்சியின்போதே பூர்ஷ்வா ஒழுங்கை நிலைநாட்டினார் மோடி.
விடுபட்டவற்றில் தமது 2.0 ஆட்சியின்போது பூர்ஷ்வா ஒழுங்கை நிலைநாட்டி வருகிறார் மோடி.(பூர்ஷ்வா ஒழுங்கு என்றால் என்ன, entropy என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவும். அது தெரியாமல் இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது) போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் நுகர்வு குறித்து மோடி அரசு 2019 முதலே தீவிரமானதும் கடுமையானதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் என்பது உலகளாவிய தொழில். மோடி அரசின் தீவிரம் காரணமாக பல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர்.
மிகவும் பெரிய மனிதர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டார் என்ற செய்தி சிலருக்கு வியப்பைத் தரலாம். அனால் அழியாத உண்மையாக அது இருந்து வந்திருக்கிறது.கேரளத்தில் மார்க்சிஸ்ட் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். உள்துறை அமைச்சர் என்றால் போலிஸ் துறையைத் தன் பொறுப்பில் வைத்திருந்தவர். பின்னர் இவர் கேரளத்தில் மார்க்சிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவர்.இவரின் இளைய மகன் பினிஷ் கொடியேரி.
இவன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டான். போலிஸ் இவனைக் கைது செய்து பெங்களூரு பரப்பன அக்கிரகார சிறையில் அடைத்தது.இவன் சிறைக்குப் போனது போன வருஷம், அதாவது 2020ல். தேதி அக்டோபர் 29, 2020. ஒரு வருஷம் சிறையில் கிடந்தான். ஒரு வருஷம் கழித்து நேற்றுத்தான் அவனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.மகாராஷ்டிராவில் சிவசேனை, NCP, காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.NCP என்றால் தெரியுமா? தெரியாது. சரத் பவரின் கட்சி என்றுதெரிந்து கொள்ளுங்கள்.
சரத் பவார் கட்சியின் சார்பாக உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களில் ஒருவர் நவாப் மாலிக். இவரின் மகளைத் திருமணம் செய்தவர்சமீர் கான். அமைச்சரின் மருமகனான இவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் (09.01.2021)போதை தடுப்பு போலீசால் (NCB) கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப் பட்டார். செப்டம்பர் மாதத்தில்தான் ஜாமீன் கிடைத்தது. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு அமைச்சராக நீடிப்பதற்கு ஏதேனும் தார்மீக அருகதை இருக்கிறதா? இல்லை. மானங்கெட்டுப் போய்அமைச்சர் பதவியில் நீடிக்கும் கயமைத்தனம்!!!
கேரள மார்க்சிஸ்ட் தலைவரின் மகன் மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் இந்த VIPகளைத்த தொடர்ந்து தற்போது ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறான்.கிட்டத்தட்ட ஒரு வருஷம் சிறையில் இருந்த பின்தான் இது போன்ற வழக்கில் ஜாமீன் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் ஜாமீன் என்பது ஷாருக் கானின் மகனுக்குத் தங்கத் தட்டில் வைத்து வழங்கப்படும்.ஷாருக் கானின் மயிரையோ ஆர்யன் கானின் மயிரையோமோடியாலோ அமித் ஷாவாலோ ஒருநாளும் புடுங்க முடியாது.
கட்டுரை நியூட்டன் அறிவியல் மன்றம்