தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது . திருமங்கலத்தில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் பணியாற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளை கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் அந்ததலைமை ஆசிரியர் அரசுப் பள்ளி மாணவிகள் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திலகவதி என்பவர் தான் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்

மாணவிகள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் நாங்கள். இங்கு சமீபத்தில் புதிதாக திலகவதி என்ற ஒரு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். நாங்கள் யாரேனும் தாமதமாக வந்தால் தலைமையாசிரியர் திலகவதி வெளியில் நிற்க வைத்து விடுகிறார். மாணவிகள் மாதவிடாய் பிரச்சனையில் இருக்கும் போதுகூட, வெயிலில் முட்டி போடச் சொல்லிக் கஷ்டப்படுத்துகிறார்.
எங்கள் ஊரிலிருந்து காலை 7 மணிக்கெல்லாம் பஸ் ஏறினால்தான் இங்கு நேரத்துக்கு வரமுடிகிறது. அப்படி ஏறியப்பின்னும் பஸ் லேட் ஆவதால் எங்களுக்கு தாமதம் ஆகிறது. ஆனால் அவற்றை புரிந்துகொள்ளாமல், ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார். கழிப்பறையில் பெரும்பாலும் தண்ணீர் வசதிகூட இருப்பதில்லை. சாப்பிடுவதற்குக் கூட சரியாக விடுவதில்லை.
தலைமையாசிரியர் கொடுமையால் பல மாணவிகள் டிசி வாங்கி சென்றுள்ளனர். நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அரசுப் பள்ளியை நம்பிதான் உள்ளோம். எதாவது புகார் தெரிவித்தால் டி.சி வாங்கி சென்று விடுங்கள் என்று கூறுகிறார்.
கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என்று புகார் சொன்னால் ‘ஒரு மணி நேரம் மட்டுமே ஒருநாளில் தண்ணீர் வரும்’ என்கிறார். பெரிய அதிகாரிகள் வந்தால் மட்டும்தான் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். நாங்கள் புகார் தெரிவித்தால் பெற்றோர்கள் கூட்டம் போட்டு எங்களைப் பற்றி தப்புத்தப்பாக சொல்வதால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது” என வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் அவர்கள், தங்கள் பிள்ளைகளை கழிவறை செல்ல அனுமதிக்காததால், பிள்ளைகள் தண்ணீர் அருந்துவதையே தவிர்க்கின்றனர் என்பதுபோன்ற கடும்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















