கிராம சபை கூட்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்த துணையாக இருந்த ஸ்டாலினுக்கு தலைவராக இருக்க தகுதியே இல்லை என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் சிவி சண்முகம், திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும், அதற்கு பொன்முடி, ஏ.வ.வேலு, துரைமுருகன் ஆகியோர் ஏஜெண்டுகள் என்றும் தெரிவித்தார். திமுக கட்சி ஒரு குடும்ப கட்சி என்ற அமைச்சர், கோவையில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்ணை குண்டர்களை வைத்து அடித்ததாக குற்றசாட்டினார்.
கேள்வி கேட்ட பெண்ணிற்கு பதில் சொல்ல தயாராக இல்லாத ஸ்டாலின் தலைவனாக இருப்பதற்கு தகுதி அற்றவர் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அதிமுகவினர் நினைத்தால் திமுகவினரை கரைவேட்டியை கூட்ட கட்ட விடமாட்டோம் என்றார். மேலும் விஞ்ஞான ரீயாக 2ஜி ஊழல் செய்கிற கட்சி தி.மு.க என்றும், தி.மு.க ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்ட பஞ்சாயத்து மற்றும் அராஜம் நடைபெற்றதாகவும் சாடினார். தான் நடைபெற்றதாக கூறினார்.