சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் சமையல் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் விலையை இன்று ரூ.25 உயர்த்தியது இன்றைய சில்லரை விற்பனை விலை – 5% GSTயையும் சேர்த்து : ₹900. இதில் மத்திய அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது, மாநில அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது.
மத்திய அரசு சென்ற வருடம் வரை ஒரு சிலிண்டர் விலையில் 25% மானியம் + போக்குவரத்து கட்டணம் கொடுத்து வந்தது.ஒரு குடும்பம் வருடம் 12 சிலிண்டர் வரை மானியம் பெறலாம்.
சென்ற வருடம் கோவிட் காரணமாக 9 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு 3 சிலிண்டர் முற்றிலும் இலவசமாக அளித்தது.தமிழ்நாட்டில் மட்டும் 31 லட்சம் குடும்பங்கள் 3 சிலிண்டர்கள் இலவசமாக 2020-21 நிதியாண்டில் பெற்றனர்.
இந்த வருடம் போக்குவரத்து கட்டணம் மட்டுமே மத்திய அரசு பயனாளிகள் கணக்கில் செலுத்துகிறது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ₹30 முதல் 60 வரை மானியமாக செலுத்த படுகிறது.
சிலிண்டருக்கு ₹21.50 வருவாய் பெறும் மத்திய அரசு ₹30 முதல் ₹60 வரை மானியமாக தருகிறது.இந்த மானியம் இந்தியாவில் அனைவருக்கும் சமையல் எருவாயு ஒரே விலையில் கிடைக்க உதவுகிறது
அதே ₹21.50 மானியமாக பெறும் மாநில அரசு என்ன செய்கிறது ? தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் மாதம் ₹100 மானியம் தருமா விடியல் அரசு ?
இந்த நிதி ஆண்டில் சமையல் எரிவாயு மொத்த மானியத்தை மத்திய அரசு ₹26,842 கோடி குறைத்துள்ளது ஆனால் உணவு தானியத்திற்கான மானியத்திற்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ₹1,27,266 கோடி அதிகரித்துள்ளது இதன் மூலம் நாடு முழுதும் ஏப்ரல் முதல் நவம்பர் வரை இலவச அரிசி கோதுமை வழங்கபட்டு வருகிறது.
அதாவது – அனைத்து பிரிவு மக்களுக்கும் போகும் சமையல் எரிவாயு மானியத்தை குறைத்து
விவசாயிகளிடம் இரண்டு மடங்கு அதிக உணவு தானியத்தை மத்திய அரசு வாங்குகிறது
விலையின்றி அரிசி கோதுமை அனைத்து ஏழை எளிய மக்களுக்கு அளிக்கிறது இதுதான் உண்மையான சமூக நீதி