அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும்.
சூரிய மந்திரத்தை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம். அல்லது நீராடி சூரிய நமஸ்காரம் செய்யும் போதும் சொல்லலாம்.
சூரிய காயத்ரி மந்திரம் 1
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்.
சூரிய காயத்ரி மந்திரம் 2
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்.
பொருள்
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும், வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த, தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி.
தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரிய பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் சொல்ல இந்த மந்திரத்தில் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற்சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.














