உத்தர பிரதேச மாநிலம் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் மிக பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா,வரும் 22 – ஆம் தேதியன்று கோலாகலமாக நடக்கவுள்ளது.
அகிலமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சாஸ்திர சம்ப்பிரத்யங்கள் படி கருவறைக்குள் மூலவர் சிலையான பால ராமர் (ராம் லல்லா) சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு முன் , வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்த ராம் லல்லா சிலையின் படங்கள் வெளியிடப்பட்டிருந்தது

இன்று வெளியான படத்தில் சிலை வடிவமைப்பில் உள்ள ஒவ்வொரு நுணுக்கங்கமும் பிரமிக்க வைக்கிறது. ராமரின் முகம் முழுவதும் தெரியும் வகையிலான இந்த சிலையின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.

மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட 51 அங்குல சிலை நேற்று (18ம்தேதி) அதிகாலை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று பிற்பகல், ராம் லல்லா சிலை கருவறையில் வைக்கப்பட்டது என்று அருண் தீட்சித் தெரிவித்தார். ஜனவரி 23ம் தேதி முதல் ராமர் கோயில் பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
