நெல்லுக்கான காப்பீடு மறுக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்துள்ளார் விவசயிகள்.
வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டதையே பெருமையாக சொல்லி கொள்ளும் தி.மு.க அரசு, நிதிச்சுமை என்று கூறி நெல் விவசாயிகளின் உரிமையை பறித்துள்ளது. விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு நெல் சாகுபடி முழுமையும் அழிந்து விடுகிற நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மேலும் கொள்முதல் நிலையங்கள் இல்லாமல் அறுவடை செய்த நீளும் வீணாகும் நிலையும் இருந்து வருகிறது.
இயற்கை சீற்றங்களால் நஷ்டம் அடையும் விவசாயிகளை பாதுகாப்பதற்காக மறைந்த பிரதமர் விபி.சிங் தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.
இந்த காப்பீடு எந்த வித முன்னறிவிப்புமின்றி சட்டமன்றத்திலும், விவசாயிகளிடம் விவாதிக்காமல் ரத்து செய்துள்ளது.மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு.
அது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது முதல்வரோ அறிவிக்கமால் வேளாண் துறை செயலாளர் மூலம் கொள்கை நிலை மாற்றம் குறித்து அறிக்கை வெளியிடுவது மரபை மீறிய செயலாகும்.
மேலும் 2021-22 சாகுபடி பருவத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்ய தடை விதித்திருப்பதும், அதற்கு பேரிடர் காலத்தில் பாதிப்பு ஏற்படுமேயானால் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய அரசின் கொள்கைப்படி விவசாயி தனது நிலத்திற்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறுவது உரிமையாகும்.
மத்திய அரசால் சட்டமாகக் கொண்டு வரப்பட்ட திட்டத்தை தமிழக அரசு தன் விருப்பத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்வதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது தனது பொருப்பை தட்டிக் கழிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தி.மு.க அரசு தன்னிச்சையாக ரத்து செய்திருப்பது மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கிடையே நெல் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளின் நம்பிக்கையைக் குறைக்கும் வகையிலான இந்த அறிவிப்பினை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
2020-21 ஆம் ஆண்டில் நெல்லுக்கு விவசாயிகளால் செய்யபட்ட பயிர் காப்பீட்டின் நிலை என்ன என்பது குறித்தும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.
தற்போது புதிதாக பொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு இழப்பீடு வழங்குவது குறித்து வாய் திறக்க மறுப்பது, நம்பிய விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கும் செயலாகும்.
காப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும், எனவே காப்பீடு குறித்து தமிழக அரசாங்கம் திறந்த மனதோடு விவசாயிகளோடும், சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டும்
மறுக்கும் பட்சத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட தமிழக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.
ஆனால் இன்னும் அந்த ஆடி கார் அய்யா கண்ணு விவசாயி எங்கே றன தேடி வருகிறார்கள் நம்ம நெட்டிசன்கள்