தமிழகத்தில் சி.கிரனூர் கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை நம்பி அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நெல் மணி மூட்டைகளை கொடு வந்தார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் என நம்பி வந்தவிவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் என்ற கிராமம் உள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகள் வாழ்வாதாரம் விவசாயம் தான். இதன் காரணமாக அங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தி.மு.க அரசு அறிவித்தது. இதன் காரணமாக சுமார் 10 கிராமங்களுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டன் கணக்கில் நெல் மூட்டைகளை சி.கிரனூர் பகுதிக்கு கொண்டுவந்தார்கள்
விவசாயிகள் தங்களிடம் உள்ள மூட்டைகளை குவிக்க தொடங்கியதன் காரணமாக டன் கணக்கில் நெல் மூட்டைகள் குவிந்தது. இதனை தொடர்ந்து நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழை காரணமாக 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகியுள்ளது.
இதனால் கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் மழையால் சேதமடைந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் விட்டு வருகின்றனர். இது பற்றி நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் விவசாயிகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே அதிமுக அரசில் நடந்திருந்தால் அனைத்து ஊடகங்ளும் அந்த பகுதியினை முற்றுகையிட்டு பிரேக்கிங் நியூஸ் தந்திருப்பார்கள். மேலும் அய்யாக்கண்ணு திருமுருகன் காந்தி சீமான் என விவசாய போராளிகள் அனைவரும் ஓன்று சேர்ந்து போராட்டம் நடத்திருப்பார்கள். இப்போ அதெல்லாம் காணவில்லை.ஏன் எண்பத்தி விவசாயிகளும் மக்களும் தான் புரிந்து கொள்ளவேண்டும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















