டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா பேசியதாவது. இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, பிரிவினைவாதிகளோ , தீவிரவாதிகளோ ஒரு அங்குல அளவு தீங்கு விளைவிப்பதை கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இனி எங்களது ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
எல்லை தாண்டி நடத்தப்பட்ட நமது தாக்குதல்கள் பற்றி உலக நாடுகள் பேசத்தொடங்கிவிட்டனர் . உலக அளவில் இந்தியாவின் பலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக காஷ்மீர் விவகாரத்தை நாம் கையாண்டது, அகண்ட பாரதத்தை நோக்கிய பயணமாக பார்க்கப்படுகிறது. 2014 ஆண்டு மோடி பிரதமராக வரும் முன்பு, எங்கு பார்த்தாலும் தீவிரவாத தாக்குதல்கள் , கலவரங்கள் என நாடே அழிந்து கொண்டிருந்தது. முக்கியமாக எங்கு பார்த்தாலும் மக்களுக்காக போடப்பட்ட திட்டங்கள் ஏமாற்றப்பட்டு இருந்தது. 2014 ஆம் ஆண்டு மக்கள் பாஜகவிற்கு கொடுத்த வெற்றி , காங்கிரசுக்கு கொடுக்கப்பட்ட பேரிடியாக பார்க்கப்பட்டது.
பாஜகவின் கடந்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் , உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியது மோடி அரசுதான். தற்போதுள்ள கூழ்நிலையில் இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும் , அதனை மீட்டு 2024 க்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. அதை அடைய நாம் அனைவரும் பாடுபடவேண்டும் என அமிட்ஷா கூறினார்.