இந்த டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் -அண்ணாமலை அதிரடி..

நாமக்கல்லில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பூங்கா சாலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 45 நாட்களை கடந்த நடந்து வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர் என்று கூறி, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

அத்துடன், தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். மேலும், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அதன் அமைச்சர் சேகர்பாபு குறித்தும் அண்ணாமலை கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது, கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை இருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்டவர்கள் மீது இம்மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூலை முதல் வாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் காவல் துறையினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர்.முதல் ஆளாக ஒரு காவல் நிலையத்தை நான் முற்றுகையிடுவேன், இந்த மாநில டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்று சவால் விட்டுப் பேசினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version