சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து . திமுகவின் பிரச்சார முழக்கம் நீட் தேர்வு ரத்து, தான் சட்டமன்ற கூட்ட தொடரின் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என திமுக தலைவர் பிரச்சாரம் செய்தார். தலைவரின் மகனையும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி நீட் தேர்வை எப்படி ரத்துசெய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் அந்த ரகசியத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து காட்டுகிறோம். அடிமை அரசாக இருக்காது என உதயநிதியின் பில்டப் வேற லெவலில் இருந்தது.
நீட் தேர்வை ரத்து செய்வது தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது இல்லை என்று பலர் கூறி வந்தபோதிலும் திமுக அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதியை தொடர்ந்து வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கும் வந்துவிட்டது நீட் தேர்வை ரத்து செய்வார்கள் என அனைவரும் உற்று நோக்கும் வகையில் நீட் தேர்வு சாதக பாதகங்களை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்தலைமையில் குழு அமைத்து நீட் தேர்வினை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து பாஜகவின் பொது செயலாளர் கரு.நாகராஜன் உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனுவில் : மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான, ‘நீட்’ தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.இதற்கான அரசாணை ஜூன் 10ல் பிறப்பிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது. இது சட்டப்படி தவறு இந்தக் குழு அமைப்பதால் வீண் செலவு தான் ஏற்படும். பல்வேறு ஆய்வுகள், நீதிமன்ற உத்தரவுகள் வாயிலாகவே, பொது நுழைவு தேர்வு வந்துள்ளது. தமிழகத்தில் மாணவர்கள், தேர்வுக்கு தயாராக ஆரம்பித்து விட்டனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீட்டை, அரசு வழங்கி உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நியமனம் தொடர்பான நடவடிக்கைக்கு, தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும். என கூறப்பட்டுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் கரு. நாகராஜன் அவர்களின் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதாடினார், அவர் கூறுகையில் நீட் தேர்வு குறித்து 2017 ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கை, நீட் தேர்வின்படியே நடக்க வேண்டும். மாநில அரசு அமைத்த குழு, வீணான நடவடிக்கை. நீட் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுத்திருப்பதால், இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது”என்றார்.
தமிழக அரசு தரப்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ”தேர்தல் அறிக்கையில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டுள்ளது” என சம்பந்தமே இல்லாமல் கூறியுள்ளார் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயாமல் திமுக தேர்தல் அறிக்கை அதனால் குழு அமைத்தோம் என்றது வாதத்துக்கு உகந்தது இல்லை என வழக்கறிஞர்கள் பேசிவருகிறார்கள்.
இது தொடர்பாக உயர்நீதி மன்ற நீதிபதிகள் ‘நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளது. மேலும் அரசுத்தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படும் நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறதே அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கொள்கை முடிவை எடுக்கவே இந்த குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதால் இது குறித்து ஒருவாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 5 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.