தீவிரவாதிகள் தாலிபான்களை ஆதரித்து இயக்குனர் அமீர் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது இணைய தளங்களை ஆக்கிரமித்துள்ளது. தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய நிலையில் ஆப்கானில் ஆட்சி அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அங்குள்ள மக்கள் அனைவரும் சாரை சாரையாக ஆப்கானை விட்டு வெளியேறி வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் அங்கிருந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிலிருந்து வெளியேறும் மக்களின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது, அந்த காட்சிகள் பார்ப்பதற்கு நெஞ்சை உலுக்குகிறது.
காபூல் ஏர்போர்ட்டில் கடுமையான கூட்டம் மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் ஆப்கானை விட்டு வெளியேற காத்திருக்கிறார்கள். தாலிபான்களின் கொடுமையான ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உலகமே இருந்து வரும் சூழலில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் அவர்களுக்கு ஆதரவாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதற்கு, தமிழகத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிடும், அல்லது கருதுதுகளை பகிரும் சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை மத்திய உளவுத்துறை போலீசார் டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவரங்களின் அடிப்படையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லியில் இருந்து தமிழக உளவுத் துறையினருக்கு உத்தரவு வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆப்கன் தாலிபான்கள் போராளிகள். இயக்குநர் அமீர் கண்டுபிடிப்பு.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உலகமே இருந்து வரும் சூழலில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் அவர்களுக்கு ஆதரவாக பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், ஆப்கனில் உள்ள தாலிபன்கள் போராளிகள். கண்ணியமாக, காலரை உயர்த்தி சொல்லுங்கள்.. அவன் போராளிடா..அவனை எப்படிடா தீவிரவாதிங்கன்னு சொல்லுவீங்க. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், தங்களுடைய சொந்த கொள்கைக்காகவும், அமெரிக்காவை எதிர்த்து போராடும் போராளி. தாலிபன்கள் போராளிகள் என்று இஸ்லாமியர்கள் அனைவரும் தைரியமாக சொல்ல வேண்டும். உடனே புடுச்சி யாரும் உள்ளே போட்டுட மாட்டான். நீ சொல்லுற தீவிரவாதின்னு. என பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த மாதிரி நாளு பேர் 40இஸ்லாமிய இளைஞர்களைக் கெடுப்பதால் தான் ஆப்கன், சிரியா எனப் பல நாடுகளில் இஸ்லாமிய மக்கள் வாழ்வு நாசமாகிறது. இயக்குநர் அமீர் தாலிபான்களை ஆதரிக்க மதம் தவிர என்ன உருப்படியான காரணம் இருக்க முடியும்? ஆப்கன் மக்கள் தப்பித்து நாடுகள் தேடி ஓட தொடங்கிவிட்டார்கள். இனி பாருங்க சேவ் ஆப்கன் அகதிகள் என கிளம்புவானுக.
பெரியாரிய பெண்ணிய வாதி எவனும் இப்போது வாயை திறக்க மாட்டானுக. அது இன்னொரு Zombie கும்பல். இந்துவை மட்டுமே கடிக்கும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















