தனது வீட்டில் இருந்த சீன பொருட்களை எரித்த இயக்குநர் சக்தி சிதம்பரம்
கடந்த வாரம் இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்திய கொந்தளித்த இந்திய மக்கள் சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்து அதற்கான பிரச்சாரங்களை சமூக வலைத்தளங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள். மேலும் இந்திய திரைப்பட நடிகர் நடிகைகள் நடிகையர் சாக் ஷி அகர்வால், சனம் ஷெட்டி உள்ளிட்டோர்,சீன பொருட்களை தவிர்க்க வேண்டும் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் என வேண்டுகோள் வைத்து வருகின்றார்கள்
இந்நிலையில், சார்லி சாப்ளின், மகாநடிகர் உட்பட, பல தமிழ் படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை, தீ வைத்து எரித்தார்.
இதில், டேப்ரிக்கார்டர்கள், மொபைல் போன் உள்ளிட்ட, எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. இது குறித்து, சக்தி சிதம்பரம் கூறியதாவது:இந்திய வீரர்கள், 20 பேரை கொன்று மிரட்டி வரும் சீனா மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும். அவர்கள் தயாரித்த பொருட்களை, நாம் யாரும் பயன்படுத்தக்கூடாது. அந்த வகையில், நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சீன பொருட்களை தீயிட்டு எரித்தேன். இனி நான், சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த மாட்டேன். திரையுலகினரும், சீன தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















