பிரதமர் மோடி லட்சத்தீவு சென்று வந்ததிலிருந்து மாலத்தீவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. ஏனென்றால் மாலத்தீவுக்கு சுற்றலா செல்பவர்கள் இந்தியர்களே அதிகம்.அதே போல் மாலத்தீவுக்கு இந்தியாவில் இருக்கும் லட்ச தீவை மறந்து விட்டார்கள். லட்சத்தீவின் சுற்றுலா பயணிகளின் வருகையை மேம்படுத்தவும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.மேலும் லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார்.
இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், “லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்”
இதன் பின் தான் கலக்கமடைந்தது மாலத்தீவு. பிரதமர் மோடி லட்சத்தீவில் சென்று அதன் அழகை உலகிக்ரு காட்டினார். உலகம் இப்பொழுது லட்ச தீவு எங்கு உள்ளது என தேடிக்கொண்டு இருக்கிறது.கூகுளில் தேடப்பட்டதில் முதலிடம் பிடித்தது லட்ச தீவு. மாலத்தீவுக்கு இது பயத்தை ஏற்படுத்தியதுள்ளது
அதன் பின் பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு பரப்பி சமூகவலைத்தளத்தில கருத்துக்களை பதிவிட்டடார்கள். இதற்கு பதிலடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா மேற்கொள்ள இருந்த 10000 க்கும் மேற்பட்ட இந்திய பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை கேன்சல் செய்து மாலத்தீவுக்கு அதிர்ச்சி அளித்தனர். உடனே சுதாரித்து கொண்ட மாலத்தீவு மந்திரிகள் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட மரியம் ஷுயினா, மால்ஷா ஷரீப் மற்றும் ஹாசன் சிகான் ஆகிய 3 மந்திரிகளை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மாலத்தீவின் சுற்றுலா சந்தையில் இந்தியா 11% மற்றும் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா மேலும் 11% பங்களிக்கின்றன. இந்துக்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் மற்றும் பிரதமர் மோடி மற்றும் பாரதத்தை அவமதிப்பதன் மூலம், மாலத்தீவு அதன் சுற்றுலா சந்தையில் 22% இழக்க உள்ளது.
இது மாலத்தீவின் அந்நிய செலாவணியில் 60% ஆகும்.
இந்த நிலையில் தான் மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் சனிக்கிழமை இரவு பல மணி நேரம் எதிர்பாராத தொழில்நுட்ப சீர்குலைவு காரணமாக செயலிழந்த பின்னர் மீட்டெடுக்கப்பட்டன.
தற்காலிக இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மூன்று மாலத்தீவு அரசாங்க வலைத்தளங்கள் இப்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, இணையத்தளங்கள் செயலிழந்து, சந்தேகத்திற்கிடமான சைபர் தாக்குதலில் அணுக முடியவில்லை.
இடையூறுக்குப் பிறகு, மாலத்தீவு ஜனாதிபதியின் அலுவலகம் X இல் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனாதிபதி அலுவலக இணையதளம் தற்போது எதிர்பாராத தொழில்நுட்ப சீர்குலைவை எதிர்கொள்கிறது என்பதை நினைவில் கொள்க. தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய மையம் (NCIT) மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இதை உடனடியாகத் தீர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஏதேனும் சிரமத்திற்கு மன்னிக்கவும். உங்கள் புரிதலுக்கும் பொறுமைக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள் நீக்கப்பட்ட பிறகு மாலத்தீவு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பல கேள்விகளை முன்வைக்கிறது. மாலத்தீவுகளில் இப்பொழுது தான் பாகிஸ்தான் மாதிரியே அடையாளம் தெரியாத ஆசாமிகளின் ஆட்டம் ஆரம்பித்து இருக்கிறது. இனி போக போக பாருங்கள்.
அடுத்து மாலத்தீவு பாகிஸ்தான் போல் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம், அதற்கு சீனாவும் பாகிஸ்தானும் தான் காரணமாக இருப்பார்கள். அதற்கான வேலையை மாலத்தீவுகளில் தொடங்கிவிட்டார்கள். இது தெரியாமல் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு சீனாவின் பேச்சைக் கேட்டு மோடியிடம் வம்பு வளர்த்துக்கொண்டு இருக்கிறார்