இந்தியா சீனா எல்லையில் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியாவில் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. சீன பொருட்களை புறக்கணிக்க ஒவ்வொரு நகரத்திலும் சீன பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் வீடுகளில் பொருத்தபட்டுள்ள சுமார் 15 ஆயிரம் சீன மின்சார மீட்டரை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மின்சார வாரியத்தின் தலைவர் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட ஸ்மார்ட் மின்சார மீட்டர்களில் 1.50 லட்சம் இணைப்புகளில் முதற்கட்டமாக 10%-ல் 15,000 மின்சார மீட்டர்களை பொருத்தி இருந்தார்கள் மேலும் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை நிறுவவும் உள்ளூர் அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கொரோனா வைரஸ் தோற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மின்சார மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், சீனா இந்தியா இடையே கல்வான் பகுதியில் மோதல் ஏற்பட்டது இதனால் சீனா மீதான கோபம் அதிகரித்து இப்போது சீன மீட்டரை உடனடியாக அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.