திமுக கூட்டணியின் வெற்றி சாத்தியமா?

ஏபிபி சிவோட்டர் கணிப்பு திமுக கூட்ட ணி தான் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்கிறது.

இப்போதைக்கு இது ஏற்று கொள்ள கூடியது தான் என்றாலும்
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்க ளுக்கு மேல் இருக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த கணிப்பு ஒரு உண்மையை உணர்த்துகிறது. அது என்னவென் றால் இது ஒரு வேவ் எலெக்சன் அல்ல.அதாவது ஆட்சிக்கு எதிரான அலை எதுவும் இல்லை என்கிறது.

இந்த கணிப்பு கிட்டத்தட்ட 2006 சட்டமன்ற தேர்தல் முடிவு மாதிரியே இருக்கிறது .

2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்ட ணி69 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 163 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது.

அந்த 2006 சட்டமன்ற தேர்தல் மாதிரியே தான் தமிழகத்தில் இப்பொழுது அரசியல்
சூழ்நிலை இருக்கிறது. 2004 லோக்சபா தேர்தலில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியிடம் வாஷ் அவுட்டாகி இருந்த அதிமுக
தேர்தலுக்கு பிறகு மக்களிடம் நல்ல பெயர் பெற்று 2006 சட்டமன்ற தேர்தலின் பொழுது ஆ ட்சிக்கு எதிரான மக்களின் மன நிலையை குறைத்து இருந்தது.


கிட்டத்தட்ட அப்பொழுது எப்படி ஜெயலலிதா செயல்பட்டாரோ அதே மாதிரி இப்பொழுது எடப்பாடி செயல்பட்டு வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்
அதனால் அதிமுக கூட்டணிக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் லோக்சபா தேர்தல் மாதிரி படுதோல்வி கிடைக்காது
என்று உறுதியாக கூற முடியும்.

நான் மீண்டும் கூறுகிறேன். வருகின்ற சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக 1991 1996 2011 மாதிரி ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசிய தேர்தலாக இருக்க போவது இல்லை.மாறாக 2006 அல்லது 2016 சட்ட மன்ற தேர்தல் மாதிரி அமைய இருக்கிறது.

இப்போதைய நிலையில் அதிமுக கூட்ட ணிக்கு 2006 சட்டமன்ற தேர்தல் மாதிரியான முடிவு தான் என்றாலும் வருகின்ற காலங்களில் அதிமுக கூட்டணியை வழிநடத்த இருக்கும் அமித்ஷா வகுக்கும் வியூகங்களினால் நிச்சயமாக அதிமுக கூடடணிக்கு 2016 சட்டமன்ற தேர்தலில் கி டைத்த வெற்றி மாதிரியே 2021 சட்டம ன்ற தேர்தலிலும் கிடைக்கும் என்று எதிர்
பார்க்கலாம்.

எதுவாக இருந்தாலும் இப்போதைய நி லையில் தமிழக சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு தான் சாதகமாக இருக்கிறது என்பது 100 சதவீதம் உண்மையாகும்.

ஆனால் தேர்தல் நெருங்கி வரும் பொழுது இந்த நிலைமை நிச்சயமாக மாறி விடும்.

ஏபிபி சிவோட்டர் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 41 சதவீதம் அதிமுக கூட்டணிக்கு 29 சதவீதம் என்கிறது.இது வே அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய
அளவில் நம்பிக்கை அளிக்கும் விசயம் ஆகும்.

ஏனென்றால் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 52 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.அதிமுக கூட்டணி
31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.

இரண்டு கூட்டணிகளுக்கும்
இடையே இருந்த வாக்கு வித்தியாசம் 21 சதவீதம் ஆகும்.

ஆனால் இப்பொழுது உள்ள நிலையில் திமுக அதிமுக கூட்டணி இடையே உள்ள வாக்கு வித்தியாசம் 11 சதவீதம் தான் இருக்கிறது.

ஆக கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக கூட்டணி 11 சதவீத வாக்குக ளை இழந்து இருக்கிறது. அதே நேரத்தில்
அதிமுக கூட்டணி 2 சதவீத வாக்குகளை தான் இழந்து இருக்கிறது.

இதுவே அதிமுக கூட்டணிக்கு நம்பிக்கை அளிக்கும் மிகப்பெரிய விசயமாகும்.

இன்னும் திமுக அதிமுக கூட்டணிகள் இறுதியாக வில்லை. மூன்றாவது நான்காவது அணிகளில் இணையும் கட்சிகள் பற்றிய தெளிவான புரிதல் எதுவும் இ ப்பொழுது இல்லை.மூன்றாவது மற்றும் நான்காவது அணிகளில் இடம் பெற இருக்கும் கட்சிகளை பொறுத்து திமுக இன்னும் சில சதவீத வாக்குகளை இழக்கும்.

அதே மாதிரி கூட்டணி அடிப்படையில் பா ர்த்தால் திமுக தான் இப்பொழுது உள்ள நிலையில்இருந்து சில கட்சிகளை இழக்க இருப்பதால். அதன் வாக்கு சதவீதம் இப்பொழுது உள்ளதை விட மேலும் குறையுமே தவிர நிச்சயமாக உயராது.

ஆனால் அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வந்து சேரும் என்பதால் அதிமுக கூட்டணி யின் வாக்கு சதவீதம் 35 சதவீதத்தை நிச்சயமாக தாண்டி விடு ம்.அதே நேரத்தில் திமுக கூட்டணியில்
இருந்து காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் வெளியேறும் என்பதால் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் நிச்சயமாக 35 சத வீதத்திற்கும் கீழே வந்து விடும்.

இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக திமுக கூட்டணியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கப்போவ து தினகரன் கட்சியும் காங்கிரஸ் கட்சியு ம் தான்.தினகரன் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினாலோ இல்லை
அதிமுகவுடன் கூட்டணி அல்லது இணைப்பு இதில் எது ஒன்று நடைபெற்றாலும் போதும் அதிமுக கூட்டணி திமுக கூட்ட ணியை ஓவர் டேக் செய்து விடும்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு தினகரன் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுதல் எ ன்று இரண்டு நிகழ்ஙுகளும் நடைபெற்று
விட்டால் ஏபிபி சிவோட்டர் அளித்துள்ள இந்த திமுக அதிமுக கூட்டணி வாக்கு சதவீதம் அப்படியே ரிவர்சாக மாறி விடும்.

அதாவது அதிமுக கூட்டணி 35+ சதவீதம் திமுக கூட்டணி 35 சதவீதம் என்று மாறிவிடும்.இதற்கான வாய்ப்புகள் மிக அதிக
மாக இருக்கிறது.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதும் தினகரன் கட்சி அதிமுக கூட்டணிக்கு வருவதும்
ஒரு சேர நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது.

அது மட்டுமல்ல காங்கிரஸ் திமுக கூட்ட ணியில் இருந்து வெளியேறி கமல் உடன் கூட்டணி அமைக்கும் பொழுது அது பிரி க்க இருக்கும் வாக்குகளினால் திமுக
கூட்டணி இன்னும் சில சதவீத வாக்குக ளை இழக்கும் இதனால் திமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளுக்கும் குறைவாக வந்து விடும்.ஆனால் அதிமுக கூட்டணி
35+ என்கிற அளவிலேயே இருக்கும்.

எழுதி வைத்து கொள்ளுங்கள். திமுக கூ ட்டணிக்கு 30-35 சதவீத வாக்குகள் அதி முக கூட்டணிக்கு 35-40 சதவீத வாக்குகள் என்கிற கணக்குப்படி பார்த்தால் தொகுதிகள் அடிப்படையில் அதிமுக கூட்டணிக்கு 125-135 தொகுதிகள். திமுககூட்டணி க்கு 90-100 தொகுதிகள் கிடைக்கும்.

இது கிட்டத்தட்ட 2016 சட்டமன்ற தேர்தல் முடிவு தான். இது மாதிரியே 2021 சட்டமன்ற தேர்தல் முடிவு இருக்கவே அதிக வா
யப்புகள் இருக்கிறது.

ஒருவேளை அழகிரி தனிக்கட்சி ஆரம்பி த்து மூன்றாவது அல்லது நான்காவது அணியில் சேரும் பொழுது திமுக கூட்டணி இன்னும் ஒரு சில சதவீத வாக்குகளை இழக்கும்.அதனால் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று வெற்றி
பெறும் கட்சிக்கு வாக்களிக்க நினைக்கு ம் சுமார் 5 சதவீத வாக்காளர்கள் மனதில்
தோன்றி விடும்.

இதனால் அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும். .அப்பொ ழுது அதிமுக கூட்டணி நிச்சயமாக 150+ தொகுதிகளும் திமுக கூட்டணிக்கு 60+ தொகுதிகளும் கிடைக்கும். இது கிட்டதட்ட 2006 தமிழக சட்டமன்ற தேர்தல் மாதிரியான முடிவு.

ஆனால் அதிமுக இருந்த இடத்தில் திமுக இருக்கும். திமுக
இருந்த இடத்தில் அதிமுக இருக்கும்.

என்னைப்பொறுத்தவரை திமுக கூட்ட ணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாது அதிமுக பிஜேபி கூட்ட ணி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்து ம் கிடையாது.

அது மட்டுமல்ல முதல் முறை யாக தமிழகத்தில் வருகின்ற ஆட்சியில் பிஜேபி அமைச்சர்கள் இருப்பார்கள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கட்டுரை விஜயகுமார் அருணகிரி

Exit mobile version