கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பிஜேபியை காரணம் காட்டி திமுக தன்னுடை ய கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பிரச்சினையை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றியும் பெற்றுவிட்டது.
ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி எதிர்ப்பை திமுக எடுத்து வைத்தாலும் அதிமுக VS திமுக என்கிற அள வில் தான் தேர்தல் இருக்கும் என்பதால் திமுக அதன் கூட்டணி கட்சிகளை பிஜே பி எதிர்ப்பு என்கிற பெயரில் மிரட்டி திமுக சின்னத்தில் போட்டியிட வைக்கவோ குறைந்த தொகுதிகளை அளிக்கவோ முடியாது.
ஏற்கனவே வைகோ திருமாவளவன் ஆகியோர் திமுகவின் சின்னத்தில் போட்டி யிட முடியாது என்று கூறி விட்டார்கள். அதோடு வைகோ 20 தொகுதிகளை கேட்டு வருகிறார். நிச்சயமாக 15 க்கு குறைந்து கூட்டணியில் கையெழுத்து போட மாட்டார்.
திருமாவளவனும் குறைந்தது 10 தொகு திகளை எதிர் பார்த்து இருக்கிறார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என்று தோள் தட்டி நிற்கிறார்கள்.காமெடி என்னவெ ன்றால் நம்ம பாரிவேந்தரே 6 தொகுதிக ளை திமுக அளித்தால் கூட்டணி இல்லை என்றால் தனித்து போட்டி என்று மார்தட்டி கொண்டு இருக்கிறார்.
பாரிவேந்தரே மிரட்டும் பொழுது காங்கிரஸ் கை கட்டி நின்று வேடிக்கை பார்க்குமா? நிச்சயமாக இருக்காது. 40 தொகுதிகள் கொடுத்தால் கூட்டணி இல்லை என்றால் மாற்று வழியை தேடுவோம் என்பாகள்.
அடுத்து ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி முஸ்லிம் லீக் மனித நேய மக்கள் கட்சி என்று அனைத்து கட்சி களுக்கும் திமுக குறைந்த அளவிலாது தொகுதிகளை அளிக்க வேண்டிய கட்டா யத்தில் திமுக இருக்கிறது.
ஆக திமுக இப்பொழுது உள்ள கூட்டணி கட்சிகளை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் குறைந்தது 90-100 தொகுதிகளை அளிக்க வேண்டும்.
அப்பொழுது தான் இந்த கூட்டணியை உடையாமல் திமுகவினால் காப்பாற்ற முடியும்.
இதற்கான வாய்ப்புகள் துளி கூட கிடையாது.ஏனென்றால் திமுக 200 தொகுதிகளில் போட்டி என்கிறது. இதற்கு சாத்தியம் இல்லை என்றாலும் திமுக குறைந்தது 170 – 180 தொகுதிகளிலாவது போட்டியி டுவது உறுதி.
எனவே திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் குறிப்பாக வைகோ திருமாவ ளவன் பாரிவேந்தர் ஆகியவர்களுக்கு இப்பொழுதே இடம் இல்லை என்று கூறி விடலாம்..
காங்கிரஸ் இரண்டு கம்யூனிஸ்ட்கள் மு ஸ்லிம் லீக் இவர்களோடு ஈஸ்வரனின்
கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி இதுதான் திமுகவின் கூட்டணி என்கிற அளவிலேயே திமுகவின் பிளான் இப்பொழு து இருக்கிறது.
இதுவும் கடைசியில் இருக்குமா என்பது சந்தேகமே..
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக 40 தொகுதிகளுக்கு குறைந்து தொகுதிகளை பெறாது. அதே போல இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 10 தொகுதிகளை அளிக்க வேண்டு ம்.
அடுத்து ஈஸ்வரனின் கட்சி முஸ்லிம் கட்சிகளுக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச தொகுதிகள் என்று எப்படிகூட்டி கழித்துப் பார்த்தாலும் திமுகநிச்சயமாக 65 -70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அளிக்க வேண்டும்.
திமுகவின் 180 தொ குதிகளில் போட்டி என்கிற கணக்கின் படி பார்த்தால் இன்னும்சில கட்சிகள் வெளி யேறினால் தான் முடியும்.
அப்பொழுது ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி தான் வெளியேறும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை எப்படியாவது இந்த முறை பிஜேபியே அதிமுக கூட்டணிக்கு கொண்டு வந்து விடும் என்று எதிர் பார்க்கலாம்.
முஸ்லிம் கட்சிகளுக்கு 1 அல்லது 2 சீட் கொடுத்தாலே போதும் திமுகவில் இருந்து விடுவார்கள்.
அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை ஆக திமுக கூட்டணி பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து முடிக்கும்பொழுது தன்னுடைய நிலையை விட்டு இறங்கி வராமல் இருந்தால் பல கட்சிகளை இழந்து விடும்.
இப்படி பல கட்சிகளை திமுக இழக்கும் பொழுது அதன் வெற்றி வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விடும்.
திமுக பல கட்சிகளை தொகுதி பங்கீடு பிரச்சினை யால் இழக்கும் பொழுது அது வரை அ மைதியாக இருந்த காங்கிரஸ் தன்னுடை ய வேலையை காட்ட ஆரம்பித்துவிடும்.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக 40 தொகுதிகளை அளிக்காது என்று உறு தியாக நம்பலாம். திமுக கூட்டணியில் இருந்து வைகோ திருமாவளவன் பாரிவேந்தர் ஈஸ்வரன் போன்றோர் வெளியே றிய பிறகு காங்கிரஸ் தான். திமுகவின் ஒரே ஒரு மேஜர் பார்ட்னர் ஆக இருக்கும்.
காங்கிரஸ் இல்லை என்றால் திமுக தேர்தல் களத்திற்கு செல்லும் முன்பே தோல்வி உறுதி என்று நான் சொல்ல வேண்டாம்.
திமுகவினரே கூற ஆரம்பித்து விடுவா ர்கள்.எனவே காங்கிரஸ் திமுக இடையே நடைபெறும் கடைசி கட்ட பஞ்சாயத்தில் தான் காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாவது தெரியும்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிஜேபி எதிர்ப்பு அணி ஒன்று அமைந்து இருந்தால் திமுகவில் இப்பொழுது இருக்கும் பல கட்சிகள் அதில் தான் இருந்து இருக்கும். ஆனால் அதை அப்பொழுது அதிமுக தரப்பில் இருந்து ஏனோ உருவாக்க விரும்பவில்லை.
ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில்
பிஜேபி அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணியை தவிர்த்து இன்னும் 2 கூட்டணிகள் உருவாக இருக்கிறது ஒன்று கமல் தலைமையில் கூட்டணி இன்னொன்று சசிகலா தலைமையில் ஒரு கூட்டணி என்று 4 முனைப்போட்டி நிச்சயமாக இருக்கும்.
இதில் கமல் மற்றும் சசிகலா பிஜேபி எதிர்ப்பு அரசியலையே முன் வைப்பதால் திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலா ன கட்சிகள் அங்கு இடமாறுவது மிக சுலபமாகி விடும்.
திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறிய பிறகு திமுகவுக்கு காங்கிரஸை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலை உருவாகி விடும். அப்பொழுது காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக அளித்தாக வேண்டும் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியும் வேறு வழி தேட ஆரம்பித்து விடும்.
இறுதியில் திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் மட்டுமே இருப்பார்கள்.இதில் கம்யூனி ஸ்ட் கட்சிகள் இருப்பதும் ஒன்று தான்
இல்லாமல் இருப்பதும் ஒன்று தான். அவர்களால் திமுகவுக்கு வெற்றியை அளிக்க முடியாது.
இந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ திருமா வளவன் காங்கிரஸ் என்று திமுக
கூட்டணி கட்சிகளை இழுக்க கமல் சசிகலா அழகிரி என்று பலரும் காத்து இருப்பதால் திமுக தொகுதி பங்கீடு நடத்தி முடிக்கும் பொழுது பல கட்சிகளை இழந்து இருக்கும்.
அதனால் கடந்த லோக்சபா தேர்தல் மாதிரி அல்லாமல் இப்பொழுது தேர்தல் களத்திற்கு செல்லும் பொழுதே திமுகவினர் ஜெயிப்பது கஷ்டம் என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
திமுகவினரே அப்படி நினைக்க ஆரம்பிக்கும் பொழுது பொ து மக்கள் எப்படி திமுகவுக்கு வாக்களிப்பார்கள்?