சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரனும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவரை பற்றியும் அவரது தொகுதி பற்றியும் தினம் தோறும் செய்திகள் வந்து கொண்ட இருக்கும். ஊடங்கங்களின் கண்கள் எப்போதும் உதயநிதியை நோக்கி தன இருக்கும்.
சேப்பாக்கம் தொகுதியில் அவர் தெரு தெருவாக சென்றது அந்த தொகுதியின் அவல நிலையினை படம் பிடித்து காட்டுவர். அந்த அவல நிலைக்கு காரணம் திமுக தான் என அவருக்கே தெரியும்.
இந்த நிலையில் சட்ட விரோத குடிநீர் குழாய் இணைப்பு விவகாரத்தில், நடவடிக்கை கோரியவருக்கு, சென்னை திருவல்லிக்கேணி தி.மு.க பகுதி செயலர் காமராஜ் கொலை மிரட்டல் விடுத்த, ‘ஆடியோ’ பதிவு வெளியாகி மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட நபர் விஜயகுமார் புகார் அளித்து மூன்று நாட்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து விஜயகுமார் கூறியதாவது:
திருவல்லிக்கேணி, வெங்கடாசலம் நாயக்கன் தெருவில் வசித்து வருகிறேன். கேபிள், ‘டிவி’ தொழில் செய்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன், வருத்தப்படாத வாக்காளர் சங்கத்தை துவங்கினேன். அதன் வாயிலாக பல்வேறு சமூக பணிகள் நடக்கின்றன. பொதுமக்கள், அரசு குறைபாடுகள் குறித்து தகவல் கொடுப்பர். அதை, தகுந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். குறைகளை பெற, ‘வாட்ஸ் ஆப்’ குழு உள்ளது. திருவல்லிக்கேணி பகுதி 116வது வார்டு, கற்பக கண்ணியம்மன் கோவில் 3வது தெருவில், புதிதாக மூன்று மாடி கட்டடம் கட்டப்படுகிறது.
அந்த கட்டடத்துக்கு சட்டத்திற்கு புறம்பாக, சென்னை குடிநீர் வாரிய இணைப்பு கொடுக்கப் படுவதாக, ஜூன் 12ல் தகவல் கிடைத்தது. மாநகராட்சி, சாலையை சேதப்படுத்துவதையும் நேரில் பார்த்து அறிந்து கொண்டேன்; புகைப்படம் எடுத்தேன்.குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். வாட்ஸ் ஆப் மூலம் ஆதாரங்களை அனுப்பினேன்.
அவர் உத்தரவில், குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் நடவடிக்கை எடுத்தார். சட்ட விரோத குடிநீர் இணைப்பை துண்டித்தார். நடவடிக்கை எடுப்போம்இந்த நேரத்தில் தான், திருவல்லிக்கேணி தி.மு.க., பகுதி செயலர் காமராஜ் குறுக்கிட்டார். இணைப்பு துண்டிக்கப் பட்ட இடத்திற்கு, குடிநீர் வாரிய ஊழியர்களை அழைத்து வந்து, மீண்டும் சட்ட விரோத இணைப்பை கொடுக்க வைத்தார். மீண்டும் குடிநீர் வாரிய எம்.டி.,யை தொடர்பு கொண்டு தகவலை சொன்னேன்; நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
சிறிது நேரத்தில், திருவல்லிக்கேணி பகுதி 27ல், குடிநீர் வாரிய உதவி பொறியாளர் அன்பு, எனக்கு போன் செய்தார். ‘கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்’ என சொன்னார். பத்து நிமிடங்களில், 98400 14849 என்ற எண்ணில் இருந்து போன் வந்தது. ‘திருவல்லிக்கேணி பகுதி செயலர் காமராஜ் பேசுகிறேன்’ என்று கூறியவர், ‘சட்ட விரோத குடிநீர் இணைப்பு கொடுப்பது குறித்து புகார் செய்தது நீதானா? புகாரை வாபஸ் வாங்கு. இல்லையென்றால், உயிரோடு இருக்க மாட்டாய்’ என மிரட்டினார்.
‘நாம் இருவரும் பேசும் உரையாடல் பதிவாகிறது. அதை முதல்வருக்கும், தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதிக்கும் அனுப்ப போகிறேன்’ என்று கூறினேன். உடனே, போனை துண்டித்து விட்டார். அதன் பின்னரும், எனக்கு போன் செய்து, வீட்டு முகவரி கேட்டு மிரட்டினார். பல்வேறு போன் எண்களில் இருந்து என்னை தொடர்பு கொண்ட காமராஜ் ஆதரவாளர்கள் பலரும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதிமுகவில் தி.நகர் எம்.எல்.ஏ.வாகவும், தென்சென்னை மா.செ.,வாகவும் இருந்த சத்யநாராயணனும்,
அ.தி.மு.க., ஆட்சியில், அக்கட்சியின் தி.நகர் எம்.எல்.ஏ.,வாகவும், தென்சென்னை மா.செ.,வாகவும் இருந்த சத்யநாராயணனும், இப்படிப்பட்ட அடாவடிகளில் ஈடுபட்டதாகவும், விஜயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.ஜாம்பஜார் கூட்டுறவு சங்க தேர்தலில், தான் இயக்குனராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது, மனுவை ‘வாபஸ்’ வாங்கச் சொல்லி, சத்யா மிரட்டியதாகவும், பல முறை போலீசில் புகார் கொடுத்தும், அ.தி.மு.க., ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
திமுக தரப்பு
இது குறித்து திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க., செயலர் காமராஜ் கூறியதாவது:இந்த பிரச்னையில் எனக்கு தொடர்பு கிடையாது. வருத்தப்படாத வாக்காளர் சங்கம் என, ஒரு சங்கம் வைத்து, விஜயகுமார் பலரையும் மிரட்டி பணம் பறிப்பதாக தகவல். அப்படி ஏற்பட்ட தகராறில் என்னை இழுத்து விடுகிறார். போலீசில் புகார் கொடுத்திருந்தால் அதை விசாரித்து நடவடிக்கை எடுப்பர்.
தொகுதிக்குள் தொடர்ச்சியாக, எம்.எல்.ஏ., உதயநிதி வந்து, தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு, பல்வேறு நன்மைகளை செய்து வருகிறார். அவருக்கு உதவியாக இருந்து, நானும் பாடுபட்டு வருகிறேன். பெயரை கெடுக்க, விஜயகுமார் போன்றவர்கள் செய்யும் மலிவான அரசியல் தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்