Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தி.மு.கவில் அருந்ததியர் என ஜாதி பாக்குறாங்க..நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம்!

Oredesam by Oredesam
April 23, 2024
in செய்திகள், தமிழகம்
0
தி.மு.கவில் அருந்ததியர் என ஜாதி பாக்குறாங்க..நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம்!
FacebookTwitterWhatsappTelegram

ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்படுவதாக கூறி நெல்லை மாநகராட்சியின் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான சின்னத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுவதாக கூறி திமுக கவுன்சிலர் தனது பதவியை ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் தினம் தினம் திடீர் திருப்பங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேயராக சரவணன் பதவியேற்றதில் இருந்தே ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 45 இடங்களில் தி.மு.க வென்றுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வென்றது. மேலும் அதிமுக கட்சியினர் 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த மாநகராட்சி தற்போது திமுக வசம் உள்ளது. மேயராக சரவணன், துணை மேயராக ராஜு ஆகியோர் உள்ளனர். இந்த மாநகராட்சியில் 36வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சின்னத்தாய். இவர் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் தான் சின்னத்தாய், தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, மேயர் சரவணனுக்கு பரபரப்பாக கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிகாரிகள் ஜாதி பாகுபாடு பார்ப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பபை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக சின்னத்தாய் எழுதியுள்ள கடித்ததில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது வார்டில் குடிநீர் பிரச்சனை என்பது தலைவிரித்தாடுகிறது. 6 மாதங்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு குடிநீர் ஏற்றுவது மற்றும் குடிநீர் வினியோகம் செய்யும் உரிமம் வழங்கப்பட்டது. அன்று முதல் வார்டில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதிகாரிகள் மற்றும் சொந்த கட்சியினர் ஜாதி பாகுபாடு காட்டுகின்றனர். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த நான் மட்டும் தான் இப்போது கவுன்சிலராக உள்ளேன். ஆனாலும் கூட லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது என்னை அவமானப்படுத்தினார்கள்.

மேலும் நான் அருந்ததியர் என்பதால் என் வார்டில் திட்டமிட்டு குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். ஜாதி பார்த்து குடிநீர் பிரச்சனையை தீர்க்காமல் அலட்சியம் காட்டுகின்றனர். மக்களுக்கு பணியாற்ற முடியாததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனக்கூறி அதற்கான கடிதத்தை மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அவர் அனுப்பி உள்ளார்.

மேலும் அதற்கான கடிதத்ததை அவர் வாட்ஸ்அப் குழுவிலும் பகிர்ந்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் சம்பவம் பற்றி அறிந்த பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வகாப், சின்னத்தாய் மற்றும் அவரது கணவரை அழைத்து சமாதானம் பேசி வருகிறார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு  மோடியரசு ஆப்பு

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு

September 24, 2020
அறிவில்லாதவர் அறநிலையத்துறை அமைச்சர் எச்.ராஜா காட்டடம்.

பொட்டு வைத்துக்கொண்டு ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு செல்வார-எச்.ராஜா அதிரடி !

January 9, 2022

அண்ணாமலை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணம் வித்யாவீரப்பன் பேட்டி.

August 26, 2020
இலவச மின்சாரத்தில் நடக்கும் முறைகேடுகள் ! அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கதின் பின்னணி என்ன ?

கொரோனாவால் பாதிப்பு : ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை திட்டங்களை அறிவித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

June 29, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x