திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பா.ஜ.க கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது.
திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்தி வருகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் புரியும் இரு கட்சிகளும் எவ்வாறு தேர்தல்களில் ஜெயித்து வந்ததது என. தற்போது இரு கட்சிகளின் தலைமை என்பது வெற்றிடமே அதனால் தான் தடுமாறுகிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடுத்து வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆவர் என ரகசிய சர்வே கூறியது. ஆனால் மக்களிடையே தற்போது மாற்றம் வந்துள்ளது.
திமுக ஆட்சியை பிடிப்பது கஷ்டம் அதிமுகவுடன் போட்டி போடுவது கடுமையான போட்டியாகவே இருக்கும். முதல்வர் பழனிசாமி பெயர் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழக பாஜகவின் அடுத்ததடுத்த அதிரடி நகர்வுகளும் திமுகவிற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நடிகர் ரஜினி கட்சி துவக்கி, மெகா கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை சந்தித்தால், தி.மு.க., ஆட்சி அமைக்க, கடுமையாக போராட வேண்டியது இருக்கும் என , ‘ஐபேக்’ தரப்பில், ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கலக்கம் அடைந்துள்ள தி.மு.க., தலைமை, 200 தொகுதிகளில் போட்டியிடும் முடிவை கைவிட்டு, கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடையாத வகையில், தொகுதிகளை பிரித்து கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.,வை எதிர்கொள்வதே மிகப்பெரிய சவால் திமுகவிற்கு என்கிறபோது, மேலும் பாஜக புதிய எழுச்சி கண்டுள்ளது புதிதாக களத்திற்கு வரும் ரஜினியை வேறு சந்திக்க வேண்டுமே என்ற கலக்கம், தி.மு.க.,வை வாட்டி வதைக்கிறது. ரஜினிக்கு நெருக்கமான வெளிநாட்டு டாக்டர் நண்பர் வாயிலாக, இந்த தேர்தலில், அவர் சந்திக்கப்போகும் மன ரீதியான பிரச்னைகள், உடல்நல பிரச்னைகள் குறித்து, அவரை எச்சரிக்கும் படி, தி.மு.க., மேலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வெளிநாட்டு நண்பரும், ரஜினியிடம் பக்குவமாக சொன்னபோது, ரஜினி, தன் புன்னகையை மட்டும் பதிலாக தந்துள்ளார். தொடர்ந்து, அந்த வெளிநாட்டு நண்பர் வாயிலாக, ரஜினியை கட்சி துவக்க விடாமல் தடுக்க, தி.மு.க., மேலிடம் முயற்சித்து வருகிறது. ஆனால், ரஜினி கட்சி துவக்கு வது, 100 சதவீதம் உறுதி. பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுகவிற்கு முடிவுரை எழுதுவார் ரஜினி