தமிழகத்தில் பாஜக முன்பை விட மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.அதேபோல் பாஜகவின் அரசியல் பணி மற்றும் மக்கள் பணி அசுரவேகமாக செய்துவருகின்றது.
இதன் தொடர்ச்சியாக மாநில தலைவர் எல். முருகன் அறிவுறுத்தலின்படி. நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவியர்களின் நலன் கருதி பஸ் வசதி இல்லாத பகுதிகளில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் மற்றும் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி பாஜக இம்முடிவு எடுத்துள்ளது.
மாவட்ட வாரியாக தொடர்பு மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே வாகன உதவி தேவைப்படும் மாணவ- மாணவிகள் வருகிற 10- ஆம் தேதி (10.9.2020) மாலை 6 மணிக்கு முன்பே தங்களின் முழு விவரத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய் என்று மாணவர்களை குழப்பி வருகிறது திமுக. உங்களால் சாதிக்க முடியும் என்று மாணவர்களை களத்தில் இறங்கி ஊக்கப்படுத்தி வருகிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















