மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை திமுகவினர் சென்ற சொகுசுகார் முந்திச்செல்ல முயன்ற போது வழி கிடைக்காத ஆத்திரத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டி திமுகவினர் அராஜகம்..
இந்த காட்சிகள் பஸ் பயணிகளால் படம்பிடிக்கப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அரசுப் பேருந்து ஓட்டுரை தாக்கிய மர்மக் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. கோச்சாடை வழியாக திருப்பூர் செல்வதற்காக மதுரை காளவாசல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பாதை சிறிது குறுகலானது என்பதால் ஓட்டுநர் குறைந்த வேகத்தில் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது.
வேகமாக வந்த சொகுசு கார் அப்போது பேருந்திற்கு பின்னால் வந்த சென்னையை சேர்ந்த பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முயன்றது. பலமுறை ஹாரன் அடித்தும் பேருந்து ஓட்டுநர் வழிவிடாத காரணத்தினால் காரில் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஹாரன் அடித்தது மட்டுமின்றி, தங்களுக்கே உரித்தான பாஷையில் ஓட்டுநரை தரக்குறைவாக பேசி உள்ளனர். சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றதை புரிந்து கொள்ளாத கார் ஓட்டுனர் ஒரு கட்டத்தில் பேருந்தை ஓவர்டேக் செய்து நிறுத்தினார்.
பேருந்து கண்ணாடி, ஓட்டுநர் மீது கல்வீச்சு பின்னர் காரில் பயணம் செய்தவர்கள் பேருந்து ஓட்டுநரை அவதூறாக பேசி உள்ளனர். மேலும் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கற்களை வீசி உடைத்தனர். கற்களை ஓட்டுநர் முத்துகிருஷ்ணன்மீதும் வீசியதால் அவர் காயம் அடைந்தனர். மர்மக் கும்பல் தாக்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்களது செல்போனில் நிகழ்ந்தவற்றை படம்பிடித்தனர். இதையடுத்து பின்னால் வந்த மற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் காரில் வந்த கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களும் ஒன்று சேர்ந்து ஓட்டுநருக்கு ஆதரவாக பேசினர். ஒரு கட்டத்தில் திமுகவினர் அவசர அவசரமாக காரில் ஏறி தப்பிச் சென்றது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மக் கும்பல் தாக்கிய வீடியோ ஆதாரங்களை பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து தற்போது எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை தெரிவுத்துள்ளார்.
மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து,மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் , இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது.இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன?
இதே போல் மூன்று தினங்களுக்கு முன் திமுகவினரின் அராஜக செயல் :-
அரசு மருத்துவரை கடத்திச் சென்று தாக்கியதாக, திமுக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணிபுரிகிறார்.
கடந்த 18-ம் தேதி பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, ஒரு காரில் வந்த 3 பேர் இவரை கடத்திச் சென்றனர். ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் அடைத்து வைத்து முருகப்பெருமாளை அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், மீண்டும் காரில் அழைத்துவந்து மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.காயமடைந்த மருத்துவர் முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவரை கடத்திச் சென்று தாக்கியதாக, ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். கடத்தலுக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.