தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ANS.பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்தை தடை செய்ய முயற்சிக்கும் திமுக அரசின் செயல் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
உலகத்தின் தலைசிறந்த சேவை இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்)
1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இன்று வரை பல தடைகளை தகர்த்து மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஒரு நூற்றாண்டை 2025- ம் ஆண்டில் வெற்றியோடு கொண்டாட உள்ளது
மேலும் ஆர் எஸ் எஸ் இயக்கம் உலக மக்களின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் மனித நேயத்திற்கும் வழிகாட்டும் விதமாக “ஏகாத்ம மாணவ தர்ஷன்” என்கிற உலகின் மிகச்சிறந்த வாழ்வியல் தத்துவத்தை வழங்கி உள்ளது.
ஆர் எஸ் எஸ் நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கிய பிறகு இந்த ஆண்டு விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பேரணி மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.திமுக அரசு தமிழகத்தில் பதவி ஏற்றதிலிருந்து இந்து மதத்திற்கு எதிராக, இந்து இயக்கங்களுக்கு எதிராக, இந்து மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்து கடவுள்களை இகழ்ந்தும், கோவில்களை இடித்தும் தொடர்ந்து அடக்கு முறையை ஏவி விட்டு வருகிறது.
குறிப்பாக இந்து அமைப்புகளின் வளர்ச்சியை தடை செய்யும் நோக்கத்துடன், திமுக அரசின் காவல்துறை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதிக்கவில்லை.
காவல்துறையின் ஆணவப் போக்கை சுட்டிக்காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே பல்வேறு கட்டுப்பாடுகளை
விதித்து ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைதியாக நடந்து வந்த சூழ்நிலையில் வருகிற அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை தடை விதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்தும் உள்நோக்கத்தோடு திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வேண்டுமென்று ஊர்வலம், பேரணிக்கு அனுமதி தராமல் வேண்டுமென்று தாமதம் செய்து வந்தது அரசியல் அடக்குமுறை.
கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, தடை செய்ய முயற்சி செய்தது போல் இந்த ஆண்டும் திட்டமிட்டு காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்க திட்டமிடுவதின் மூலம் தமிழக அரசின் சதி மக்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் அனைத்தும் எந்தவித அசம்பாவிதம் இன்றி மிகுந்த அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று பொய்யாக வீர வசனம் பேசும் மக்கள் விரோத திமுக அரசு, மறு பக்கம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் செயல்படும் ஏதேச் சதிகாரமான போக்கு கண்டனத்திற்குரியது.
ஆர் எஸ் எஸ் நடவடிக்கைகள் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கிய பிறகு இந்த ஆண்டு விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பேரணி மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்பொழுது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் செய்யும் மக்கள் சேவையால் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று ஏராளமான மக்கள் ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கு கொள்கின்றனர்.குறிப்பாக கொரோனா நோய் தொற்று காலத்தில், தமிழகத்தில் மிகப்பெரிய வெள்ள அபாயம் ஏற்பட்ட சூழ்நிலையில் மக்களுக்காக ஆயிரக்கணக்கான ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இரவு பகலாக சேவை செய்து மக்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து வந்தனர்.
தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்துக்களின் ஒற்றுமைக்கும் பாடுபட்டு வரும் வலிமையான ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை கண்டு பதம் வரைக்கும் திமுக அரசு, ஆர்எஸ்எஸ் எழுச்சியை இனி தமிழகத்தில் தடுத்து அணை போட முடியாது என்பதை உணர வேண்டும்.
வரும் அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு முட்டுக்கடை போடுவது நிறுத்தி, தமிழக காவல்துறையின் பொய்காரணங்கள் அவதூறு பிரச்சாரங்களுக்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும்.
காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் இதில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.என தனது தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ANS.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்