ஒரு ஆளும் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்த்து பயத்தில் வைத்திருக்க, ஒரு திறமையான எதிர்கட்சி தலைவருக்கு 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே போதும். ஆனால் 80 க்கும் மேல் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் என்ன பயன். எதிர்க்கட்சி தலைவரை சட்டமன்றம், நீதிமன்றம், ஆளுனர் மாளிகை என்று எங்கு சென்றாலும் மதிப்பு இல்லை. கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதியை தவிர வேறு என்ன தகுதி உள்ளது ஸ்டாலினுக்கு, ஒரு செயலையும் ஒழுங்கா செய்ய முடியாத ஒரு தலைவர்தான் முக ஸ்டாலின்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 6 மாத காலமாக செய்துவரும் அரசியல் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எவ்விதக் காரணமும் இன்றி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாதத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டம் அறிவிக்கும் மு.க.ஸ்டாலின். தன் வீட்டிற்கு வெளியே வந்து 15 நிமிடம் கருப்புக்கொடி ஏந்தியவாறு பத்திரிகைகளுக்கும், மீடியாக்களுக்கும் போஸ் கொடுத்து, சந்தித்து விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று விடுகிறார். இதுதான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு எதிர்க்கட்சி தலைவராக கடந்த ஆறு மாதமாக செய்துவரும் மக்கள் பணியாக உள்ளது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று பகல் கனவு காண்பது. அவரது கனவு கனவாகத்தான் இருக்குமே தவிர, அவரது பகல் கனவு ஒருநாளும் நிஜமாக வாய்ப்பு இல்லை . தி.மு.க நிர்வாகத்தில் அனைத்து முடிவுகளையும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும், மகன் உதயநிதி ஸ்டாலினும் தான் முடிவு எடுத்து வருகிறார்கள், என்பதை சமீபத்தில் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் கு.க.செல்வம் வெட்ட வெளிச்சமாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்தது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
கட்சியின் கட்டுப்பாடு உதயநிதி மற்றும் துர்கா ஸ்டாலின் பிரசாந்த் கிசோர் தலைமையில் இருப்பதால் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் தற்போது கனிமொழியிடம் ரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் தூத்துக்குடியில் நாளைய முதல்வர் கனிமொழி என்ற சுவர் விளம்பரமும் திமுகவினரால் எழுதப்பட்டிருப்பது. ஸ்டாலின் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
மேலும் ரஜினி கட்சி ஆரம்பித்தால் தி.மு.க வெற்றி பாதிக்கும் அதற்கடுத்து தி.மு.க தேய்பிறை தான் என்பதால் பல மாவட்ட செயலாளர்கள் ரஜினி மக்கள் மன்றத்திடம் பேசிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. எது நடந்தாலும் ஸ்டாலின் அவர்களுக்கே நஷ்டம் என்று அறிவாலயம் தரப்பு பேச ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க.,வை எதிர்கொள்வதே மிகப்பெரிய சவால் திமுகவிற்கு என்கிறபோது, மேலும் பாஜக புதிய எழுச்சி கண்டுள்ளது புதிதாக களத்திற்கு வரும் ரஜினியை வேறு சந்திக்க வேண்டுமே என்ற கலக்கம், தி.மு.க.,வை வாட்டி வதைக்கிறது. ரஜினிக்கு நெருக்கமான வெளிநாட்டு டாக்டர் நண்பர் வாயிலாக, இந்த தேர்தலில், அவர் சந்திக்கப்போகும் மன ரீதியான பிரச்னைகள், உடல்நல பிரச்னைகள் குறித்து, அவரை எச்சரிக்கும் படி, தி.மு.க., மேலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வெளிநாட்டு நண்பரும், ரஜினியிடம் பக்குவமாக சொன்னபோது, ரஜினி, தன் புன்னகையை மட்டும் பதிலாக தந்துள்ளார். தொடர்ந்து, அந்த வெளிநாட்டு நண்பர் வாயிலாக, ரஜினியை கட்சி துவக்க விடாமல் தடுக்க, தி.மு.க., மேலிடம் முயற்சித்து வருகிறது. ஆனால், ரஜினி கட்சி துவக்கு வது, 100 சதவீதம் உறுதி. பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுகவிற்கு முடிவுரை எழுதுவார் ரஜினி