விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் வருகின்ற பிப்ரவரி மாதம் 6ம் தேதி சேலத்தில் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட இலைஞரணியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
சசிகலா வருகை குறித்த கேள்விக்கு,
சசிகலா தனது சிறைக் காலத்தை கழித்து விட்டு வருகிறார், அவர் வெளியில் வருவது பாஜகவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது எனவும்.


கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,
பாஜக தேசிய தலைவர் தமிழகம் வரும்போது அது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்.
நாங்கள் மாநில கட்சி அல்ல தேசிய கட்சி, எங்கள் கட்சிக்கு என ஜனநாயக முறைப்படி கட்டுப்பாடுகள், கோட்பாடுகள் உள்ளது.
திராவிட கட்சி போன்று கார்ப்பரேட் நிறுவனம் இல்லை காங்கிரஸ் கட்சி போன்று ஒருவர் நடத்தும் நிறுவனம் அல்ல என தெரிவித்தார்.
ஜனநாயக கட்சிகென சில விதிமுறைகள் உள்ளது அதன்படி எங்கள் தேசியத் தலைவர் தமிழகம் வரும்போது அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என கூறினார்.
தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் நரேஷ்குமார் தலைமையில், விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில்,திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில்.
நடைபெற்ற நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் பா செல்வம் கலந்து கொண்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜ்குமார்,மாநில துணைத்தலைவர் மூர்த்தி.
விழுப்புரம் மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாண்டியன், ஜெயகுமார், ராஜேந்திரன்,மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர்கள் திருமால், ராமச்சந்திரன் ,ராஜலட்சுமி,மாவட்ட செயலாளர்கள் சிவஞானம், முகையூர் ஒன்றிய தலைவர்கள் பரதன்,தங்கராஜ்,அர்ஜுனன்,திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் ராமன், முருகன்,சதீஷ்குமார் பத்ரி நாராயணன்,ராஜாஜி,சுனில்குமார் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















