ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகியது திமுக போட்ட பிச்சை என்றார்கள் இப்போது தலைமை செயலாளர் இழிவு படுத்தினார் நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா.என்று இதோ இன்னொரு திமுக MP அவர்களை அவமானபடுத்துகிறார்.
கடந்த புதன்கிழமை அன்று தி.மு.க எம்.பி.க்கள் டீ.ஆர்.பாலு தயாநிதி மாறன் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து ஒன்றிணைவோம் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட மனுக்களை அளித்தனர். மனுக்கள் வாங்கும் போது தலைமை செயலாளர் சண்முகம் தங்களை சரியான முறையில் கவனிக்கவில்லை என்றும் அவர் எங்களை கவனிக்காமல் உதாசீனபடுத்தினார் என திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில் தி.மு.க சார்பில் ஒன்றினைவோம் வா திட்டம் என்பது திமுக உதவி செய்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட திட்டம் ஆனால் அதில் வந்த மக்கள் குறைகளை எதற்காக அரசிடம் கொடுத்தார்கள் என்பது கேள்விக்குறி!
பிரச்சனை உண்டாக்குவதற்காகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மனுவை தலைமை செயலாளரிடம் கொடுத்தபோது தலைமை செயலாளர் சண்முகம் திமுக எம்.பி.க்களுக்கு முறையாக பதில் அளிக்கவில்லை அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். என செய்தியாளர்களை சந்தித்து குற்றம் சாட்டினார்கள் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களாக, வாயில் சொல்ல முடியாத அதாவது உங்களைப் போன்ற ஆட்களை போன்று எங்களையும் கூறுகிறார்.அதாவது தாழ்த்தப்பட்ட ஆட்களை போல நடத்துகிறார் என்று கூறினார்.
எம்.பி. யாக இருக்கும் ஒரு நபர் இது போன்று தாழ்த்தப்பட்ட மக்களை புண்படுத்தும் விதமாக பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது என்று பலர் விமர்சனம் செய்கின்றனர்.