மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாதது காரணம் குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.
எய்ம்ஸ் அமைக்கப்படும் மதுரை தோப்பூரில் நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பிரச்சனைகள் இருந்துவந்தது தற்போதுதான் அது முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசு 223 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது.இதற்குள்ளாக திமுக எதிர்கட்சியாக இருந்தபோது தொடர்ந்து இதை சுட்டிக்காட்டி பேசி வந்தது. மேலும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ் செங்கலை பிரதான பிரச்சார உத்தியாக தொடர்ந்தார்.
தற்போது திமுக ஆட்சியமைத்து 8 மாதம் ஆகிவிட்டது ஆனலும் நிலையிலும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்குவது காலதாமதமாகி வருகிறது. இதற்கு திமுக தரப்பில் யாரும் பேசவில்லை. குறிப்பாக பிரச்சாரத்திற்கு செங்கலை வைத்து படம் கட்டிய உதயநிதியோ காணவில்லை. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் கட்டுமான விவகாரம் குறித்து பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் “எய்ம்ஸ் கட்டுமானத்தில் பங்களிக்கும் ஜப்பான் நிறுவனத்தின் ஆய்வு குழு கொரோனா காரணமாக இந்தியா வர முடியாததால்தான் எய்ம்ஸ் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.ஆனால் திமுகவினர் ஒற்றை செங்கலை கொண்டு மக்களை ஏமாற்றிவிட்டார்கள். திமுக ஆட்சியமைத்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களை ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவித்தது திமுக.நீட் தேர்வு விலக்கு பெண்களுக்கு மாதம் 1000 ருபாய், மற்றும் பொங்கல் பரிசுத்தொகை, அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி,கல்விக்கடன் ரத்து, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு, என பலவற்றை கூறி ஒட்டு வாங்கியது ஆனால் அதில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை இவ்வாறு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிட்டார்கள் என எதிர்கட்சிகள் குற்றம்சுமத்தி வருவது குறிப்பிட தக்கது.
இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் படம் நடிப்பத்திலும் படம் வெளியிட்டுவிழாவிலும் கலந்து கொண்டு தனது வேலையை பார்க்க சென்றுவிட்டார் உதயநிதி.