சென்னை கொடுங்கையூரில் வசித்து வருபவர் அஸ்லாம் இவரை திமுக வட்டச் செயலாளர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கொடூரமாக தாக்கியுள்ளார்கள். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை திமுக வட்ட செயலாளரை தப்பிக்கவிட்டதாகக் கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் கொடுங்கையூரில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மாறியலில் ஈடுபட்டார்கள் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கொடுங்கையூரில் உள்ள மனித நேய மக்கள் கட்சியின் பகுதிச் செயலாளர் அஸ்லாம் இவரது
வீட்டிற்கு திமுகவை சேர்ந்த இரு பெண்கள் சென்று வீட்டில் உள்ளவர்களிடம் திராவிட மாடல் அரசின் திட்டங்களில் பயன் பெறும் படிவம் என்பதை கொடுத்து நிரப்ப சொல்லியுள்ளார்கள் .
இதற்கு மறுப்பு தெரிவித்த அஸ்லாம் அந்த படிவத்தை கிழித்து போட்டதால், திமுக வட்ட செயலாளர் அரிதாஸ் என்பவர் ஆதரவாளர்களுடன் சென்று மனித நேய மக்கள் கட்சியின் பகுதிச் செயலாளர் அஸ்லாமை கொடூரமாக தாக்கியும், மதத்தின் பெயரை சொல்லி இழிவாக பேசியுள்ளார் என குற்றஞ்சாட்டி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.
அஸ்லாம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு காவல் நிலையம் வந்த ஹரிதாஸ் ஆதரவாளருக்கும், அஸ்லாம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆளும்கட்சி வட்டச் செயலாளருக்கு ஆதரவாக காவல்துறை நடந்து கொள்வதாக கூறி சாலைமறியலில் ஈடுபட மனிதநேய மக்கள் கட்சியினர் முயல, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட ஹரிதாஸ் காவல் நிலையத்தில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.தகவல் அறிந்து 50க்கும் மேற்பட்ட ம.ம.க வினர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
தங்களது கூட்டணி கட்சியான திமுகவில் இருந்து கொண்டு இழிவாக பேசிய வட்டச் செயலாளர் ஹரிதாஸ் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வரை விடமாட்டோம் என்று ஆவேசமாயினர்.
இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி 50-க்கும் மேற்பட்டோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நேற்று இரவு திரண்டு, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோரிக்கை விடுத்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆய்வாளர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொடுங்கையூர் காவல்துறையினர் , அஸ்ஸாம் புகாரின் பேரில் திமுக வட்டச் செயலாளர் ஹரிதாஸ் அவரின் ஆதரவாளர்கள் மீது மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். போல் திமுகவினர் அளித்த புகாரில் பேரில் அஸ்ஸாம் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.